யாழில் இருவேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு

கொடிகாமம் மிருசுவில் பகுதியிலுள்ள சென்.நீக்கிலஸ் தேவாலய சேமக்காலையிலிருந்து செவ்வாய்க்கிழமை (17) ஜி – 400 ரக கைக்குண்டுகள் 18 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இறந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதற்காக குழியொன்றை தோண்டியபோது, அந்தக் குழிக்குள் இருந்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கோயிலுக்கு சென்றவரை காணவில்லை

கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்ற குடும்பஸ்தரை செவ்வாய்க்கிழமை (17) முதல் காணவில்லை என அவரது மனைவி, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சிவராத்திரி தினத்துக்காக பொலிகண்டியிலுள்ள ஆலயத்துக்கு சென்று வருவதாகச் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில்...
Ad Widget

உடனடி தீர்வு இல்லையேல் உண்ணாவிரதத்தில் குதிப்போம் : சுகாதார தொண்டர்கள்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்னால் முன்னெடுத்தனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232...

விபத்தில் இருவர் படுகாயம்

மீசாலை ஐயா கடையடிச் சந்தியில் புதன்கிழமை (18) காலையில் சிறிய ரக உழவு இயந்திரமும் வான் ஒன்றும் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுவில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் விநாயகமூர்த்தி (வயது 34), வரதராசன் சாந்தகுமார் (வயது 40) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார...

சமுர்த்தி ஊழியர்களின் சேமலாபநிதி மீள வழங்கப்படும்

சமுர்த்தி மற்றும் வாழ்வின் எழுச்சி, துறைகளில் பணிபுரியும் 8368 அதிகாரிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 28ம் திகதி அவர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்குச் சேரவேண்டிய பணம் 70,000 இலட்சம் ரூபாவை மீள அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க...

ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தேவையில்லை – சிவஞானம்

உள்ளூராட்சி மன்றங்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியொன்று இருக்கவில்லை. அவ்வாறு இருப்பது உள்ளூராட்சி தத்துவதற்கு மாறானது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை மட்டும் அழைப்பது பொருத்தமானது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்துவது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு, கடந்த 10 ஆம்...

மு.கா., தமிழரசு கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா...

இருநாட்டு ஒப்பந்தம்- இலங்கை மீனவர்கள் வரவேற்பு

இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு அரச தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவை இலங்கையின் வடபகுதி மீனவர்கள் வரவேற்றிருக்கின்றார்கள். இதுபற்றி கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் அல்பட் ஜஸ்டின் சொய்சா, இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்துவதை இரு நாட்டு அரசாங்கங்களும்...

ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [caption id="attachment_40563" align="aligncenter" width="625"] கொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர் [/caption] கொல்லப்பட்ட...

இராக்கில் 45 பேர் எரித்துக் கொலை

இராக்கின் மேற்கு நகரான அல்-பாக்தாதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 45 பேரை எரித்துக் கொலை செய்துள்ளனர் என இராக்கிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் , என்பது சரியாக தெரியவில்லை.ஆனாலும் அவர்களில் சிலர், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக இராக்கிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த...

விஜய் பிறந்த நாளில் வெளியாகும் புலி?

கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3...

ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டது முழுமையான ஏமாற்றமல்ல ; புதியதொரு ஒளிக்கீற்று என்கிறார் சுமந்திரன்

ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள்  இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் .   இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட...

நலன்புரி முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலி

யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் செவ்வாய்க்கிழமை (17) மதியம் இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று இறந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது., மேலதிக விசாரணைகளை...

சுமந்திரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் காட்டம்

போர் குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக கூறப்படும் கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின்...

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை -சம்பந்தன்

இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று...

பொதுமக்கள் எதிர்பை அடுத்து கழிவகற்றல் செயற்பாட்டையே நிறுத்தியது யாழ்.மாநகர சபை!

யாழ்.மாநகரசபையால் அகற்றப்படும் கழிவுகளை கல்லுட்டாய் வெளியில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மாநகர எல்லைக்குள் கழிவகற்றல் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்.மாநகரசபை தனது எல்லைக்குள் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை...

சிறுநீரக மோசடிகாரர்களின் மையமாக இலங்கை! தெடர்பு சாதனமாக சமூக வலைதளங்களாம்!!

இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிறுநீரக மாற்று மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும் இதற்கான தொடர்பாடல் சாதனமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இந்திய நாளிதழ்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தியாவின் ஹைதராபத் நகரில் நேற்று 4 நோயாளிகளும், ஒரு வைத்தியரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், 2 மடிக் கணினிகள், 6 கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில்...

விபத்தில் இளைஞன் பலி

யாழ்.பண்டத்தரிப்பு சந்தியில் செவ்வாய்க்கிழமை (17) துவிச்சக்கரவண்டி மீது தனியார் பஸ் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் பலியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த ரி.பகீரதன் (வயது 28) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இளவாலை மற்றும் யாழ்ப்பாணப்...

கல்லுண்டாய் மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

யாழ்.மாநகர சபை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாய் மற்றும் காக்கைதீவு பகுதியில் கொட்டப்படுவதை நிரந்தரமாக நிறுத்தக்கோரி நவாலி, ஆனைக்கோட்டை பகுதி மக்கள் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து கல்லுண்டாய் வீதியின் இரு மருங்கிலும் பகுதி பகுதிகளாக...

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கும் நாளை விடுமுறை

சிவராத்திரி தினத்துக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு புதன்கிழமை (18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலாசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான பதில் நாளாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கலாசாலை செயற்படும். கற்பித்தல் பயிற்சிக்காக பாடஅலகுகளை பெறவேண்டிய ஆசிரிய மாணவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts