Ad Widget

பொதுமக்கள் எதிர்பை அடுத்து கழிவகற்றல் செயற்பாட்டையே நிறுத்தியது யாழ்.மாநகர சபை!

யாழ்.மாநகரசபையால் அகற்றப்படும் கழிவுகளை கல்லுட்டாய் வெளியில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மாநகர எல்லைக்குள் கழிவகற்றல் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

jaffna Munincipal council

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்.மாநகரசபை தனது எல்லைக்குள் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கழிவகற்றல் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்த மாநகர சபை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவு அகற்றும் முறை மீண்டும் ஆரம்பிக்கும் வரை மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினர் அனைவரும் ஏனைய குடியிருப்பாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகாத வகையிலும் வீதிகளை அசுத்தப்படுத்தாது சுகாதாரமான சூழலை பேண ஒத்துழைப்புத் தருமாறும் கோருகிறோம் – என்றுள்ளது.

Related Posts