நலன்புரி முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலி

யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் செவ்வாய்க்கிழமை (17) மதியம் இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று இறந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது., மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையின் பெற்றோர் மயிலிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts