Ad Widget

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கும் நாளை விடுமுறை

சிவராத்திரி தினத்துக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு புதன்கிழமை (18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.

சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலாசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான பதில் நாளாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கலாசாலை செயற்படும்.

கற்பித்தல் பயிற்சிக்காக பாடஅலகுகளை பெறவேண்டிய ஆசிரிய மாணவர்கள் வியாழக்கிழமை (19) காலை பாடசாலைகளுக்கு சென்று பாட அலகுகளை பெற்று கலாசாலைக்கு வருகை தரலாம் என அவர் மேலும் கூறினார்

Related Posts