Ad Widget

மு.கா., தமிழரசு கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுக்களையும் பிரதி தவிசாளர் ஒருவரையும் பெற்றுக்கொள்வது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியையும் பேச்சுவார்த்தைக்காக இரண்டு சமூகங்களிமுள்ள சமூக, அரசியல் ஆர்வலர்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர். தமிழ்த் தரப்பை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பேசி உடன்பாட்டுக்கு கொண்டுவந்ததாக தெரியவருகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுக்களையும் பிரதி தவிசாளர் ஒருவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts