- Tuesday
- May 12th, 2026
பிரதி அமைச்சர் விஜயகலாவின் மைத்துனரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரரான பிரபல வர்த்தகர் துவாரகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வர்தகர்களிடமிருந்து கோடி கணக்கான ரூபாய்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். இவருக்கு நீதிமன்றத்தால் அனுப்பட்ட சம்மனை இவர்...
சில மணிநேரங்களுக்கு முன்பாக ரயில் மோதி யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19) 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்லத்தின் சோடனைகளை முடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து...
சட்டவிரோதமாக படகுமூலம் ஆஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்னளர். கடந்த 9ஆம் திகதி கோகஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து தடுத்துநிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட இவர்கள் அடுத்த நாள் திருப்பிஅனுப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் இணைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன தெரிவித்தார். கொழும்பிலுள்ள சுங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இம்முறையை...
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை...
இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.வடபகுதியில் இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக் 25 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக 25 வடபகுதிக்கு செல்கிறேன், தற்போது இராணுவத்திடம்...
கரவெட்டி பகுதியில் மர்மபொருள் வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கோமளா (வயது 36) என்ற பெண் காயமடைந்து செவ்வாய்க்கிழமை (17) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (18) தெரிவித்தனர். குறித்த பெண் வயலில் வேலை செய்து விட்டு ஓய்வெடுப்பதற்காக அருகிலிருந்த பற்றைப்பகுதியில் அமர்ந்த போதே, குறித்த மர்மப் பொருள் வெடித்துள்ளது. இது...
வேகமாக விரைந்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி தூணுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் அபாயகட்டத்தில் இருக்கிறார். நேற்று புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் இளவாலை விளானுக்கு அண்மையாக இடம்பெற்றது. இந்த விபத்தில் மாவை கலட்டியைச் சேர்ந்த இ.மிகுந்தன் (வயது 26), பருத்தித்துறையைச் சேரந்த கெ.பிரசாந் (வயது 24) ஆகியோரே படுகாயமடைந்தனர். இருவரும் தெல்லிப்பழை...
தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்து வரும் புலி படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இப்பாடலில் ஜில்லா, வீரம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுராமனும் இடம்பெறுகிறார். இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ருசிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இதில் ‘விஜய்யின் நடனத்தை...
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து முன்னணி நடிகையாகி விட்டார் நயன்தாரா. இவர் தற்போது மாஸ், மாயா, நண்பேண்டா, இது நம்ம ஆளு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இப்படங்கள் முடிந்த கையோடு, அடுத்து விக்ரமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு...
கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கமிவுகள் கொட்டப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களது போராட்டம் முக்கிய தீர்மானங்களை அடுத்து இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் கல்லுண்டாயில் கடந்த காலங்களில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்களும்...
பனை அபிவிருத்திச் சபையின் புதிய நிறைவேற்று பணிப்பாளராக சே.விஜிந்தன், புதன்கிழமை (18) யாழ்ப்பாண அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனால் நியமிக்கப்பட்ட இவர் வடமாகாண ஆளுநரின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஃப்ரண்ட்லைன் இதழை வெளியிடுவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுங்கப்பிரிவினருக்கு பணித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் செவ்வியை மீளவும் பிரசுரித்தமைக்காக இந்த ஃப்ரண்ட்லைன் இதழை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுங்கப்பிரிவினர் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுக்கான விஜயம் இதுவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுஎல்-166 என்ற பயணிகள் விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பையேற்று...
புதிய இராணுத்தளபதி நியமிக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அவ்வாறான உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் சேஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப் என்பவருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி...
வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இவர் நீண்டகாலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக இவர் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார், கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் 35 பேர் மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வெலிகம பொலிஸின் கடற்பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல இருந்தார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. சந்தேகநபர்கள் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாங்குளம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முல்லைத்தீவு,...
பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
