Ad Widget

வெளிநாடுகளிலிருந்து அனுப்படும் பரிசுகளை வீடுகளுக்கே சென்று கையளிக்க ஏற்பாடு

சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இம்முறையை மார்ச் மாதத்தின் இறுதியிலிருந்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லக் ஸ்ரீ சோவா என்ற தனியார் நிறுவனத்தின ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள 6 நிறுவனங்களில் தற்போது லக் ஸ்ரீ சோவா நிறுவனத்திடம் மாத்திரமே ஸ்கேனிங் இயந்திரம் இருப்பதனால் இந்நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதிகளை உடைக்காது ஸ்கேனிங் இயந்திரத்தின் உதவியுடன் சோதனைக்குட்படுத்தி அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இச்சேவைக்காக உரிமையாளர்கள் எவ்வித் கட்டணங்களையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார். பொதிகளை அனுப்புபவர் கண்டணத்தை செலுத்துவதால் பெற்றுக்கொள்பவர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.

Related Posts