பள்ளி தீ விபத்தில் 17 மாணவிகள் பலி

வடக்கு தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவிகள் தங்கும் அறையில் தீ பரவி, தூங்கிக்கொண்டிருந்த குறைந்தது 17 மாணவிகள் கொல்லப்பட்டனர். சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில், 6 லிருந்து 13 வயது கொண்ட பல மாணவிகள் தங்கியிருந்தார்கள். இதில், பெரும்பாலானவர்கள் மலைப் பகுதி பழங்குடியின கிராமங்களை சேர்ந்தவர்கள். இந்த தீ விபத்தில் 5க்கும்...

ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை?

சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து வருவதாக வெளியான தகவல்கள் ஆபிரிக்கர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இத்தகவலை சாம்பியாவின் சீன தூதுவரான யாங் யொம்மி கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சீனநாட்டவர்கள் மனித உடல்களை எடுத்து அவற்றை உப்பு மற்றும்...
Ad Widget

66 பயணிகளுடன் மாயமான எகிப்து விமானத்தின் பாகங்கள் மீட்பு

எகிப்து ஏர் நிறுவனத்தின் தடம் எண்: MS804 கொண்ட ஏர்பஸ் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்தது. அலெக்சாண்டரியாவின் மத்திய தரைகடல் பகுதியில் நடுவானில் விமானம் வெடித்து...

பயணிகள் விமானம் மாயணம்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து , எகிப்தின் கெய்ரோ நோக்கி பயணித்த விமானமொன்று மாயமாகியுள்ளது. EgyptAir MS 804 என்ற விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை  விமான சேவை உறுதி செய்துள்ளது.அந்த விமானத்தில் 59 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் ’ரியாக்சன்’ களை பயன்படுத்த வேண்டாம்

பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர். பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்...

14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு! மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரம்!!

மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின்...

நோர்வே விமானநிலையத்தில் இலங்கையர் தடுத்துவைப்பு!

ரயன் எயர் விமானத்தில் சந்தேசத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமானநிலையத்தில் நோர்வேக் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இலங்கையரும் வேறு நாட்டவர் ஒருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நோர்வேக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானம் மான்செஸ்டர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் கழிவறையில் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது குண்டு என்ற வார்த்தையைப் பிரயோகித்ததாக...

இந்து கோவிலில் லண்டன் மேயர் சாதிக் கான்

பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன்...

கணவரின் கைப்பேசியை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சிறை!!

சவுதியில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமனிதரின் சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட வல்லூநர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான...

உகண்டாவில் பதற்றம், மஹிந்தவுக்கு அதிவிசேட பாதுகாப்பு!

உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவருடன் உகண்டா சென்ற கல்கிஸ்ஸ நகரபிதா தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியாக யொவேறி முசவேனி பதவியேற்புடன் அந்நாட்டில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போதே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நகரபிதா கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்...

இளம் கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்டு கொலை!

வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...

10 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!

போலிக்கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய காவல்துறையினர் நடத்திய சுற்றி வளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பத்து பேர் இலங்கையர்களாவர். போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி மலேசியா வழியாக ஜெனீவா பயணிக்க முயற்சித்த இலங்கையர்களே கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் மலேசிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள்...

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், சிறீலங்காவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியக் கிளையினரால் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் உரையாற்றும்போது, நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போதுதான் போர்க்குற்றம்...

பேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை

உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதனை வலியுறுத்த தனது குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறைத்தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்குமாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யு வகையில் அந்தச்...

நடேசனின் மகன் பிரித்தானியா பாராளுமன்றில் சாட்சி

வெள்ளைக் கொடியோடு சென்று சிங்கள ராணுவத்திடம் சாரணடைந்த, நடேசன் படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் இன்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் நடேசனின் மகன் பல பிரித்தானிய MP க்களுக்கு முன்னதாக முதல் தடவையாக சாட்சியம் அளித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்றும். இலங்கை ராணுவம் தனது அப்பாவை கொலைசெய்தது என்ற உண்மையை அவர்...

ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி

ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்போதைய முக்கிய தலைவர்களில் ஒருவரும், ஈராக்கில் இயங்கி வந்த அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான அபு வஹீப், அன்பர் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக பென்டகன் மேலும்...

தொழில் நுட்பத்தின் உதவியுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடி

தாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. மூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம்...

பாகிஸ்தான் பேருந்து ஓட்டுநரின் மகன் லண்டன் நகரின் மேயரானார்

பாகிஸ்தான் நாட்டில் பேருந்து ஓட்டுநராக  பணியாற்றியவரின் மகன் லண்டன் நகரின் புதிய மேயராக நியமிக்கபட்டுள்ளார். முஸ்லீம் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும். லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது...

10 ஆண்டுகளின் பின் வானில் நிகழவுள்ள அபூர்வம்!!

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த...

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி துவக்கம்!!

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் 'அமெரிக்கத் தலைநகரில் தமிழ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. குளோபல் டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப் படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி...
Loading posts...

All posts loaded

No more posts