Ad Widget

நிலாவில் நீண்ட தூரம் நடந்த சாதனையாளர் எட்கரின் மரணம்

நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார்.

moon-edgar-mitchell

கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார்.

அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு.

இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற பெருமை எட்கருக்குக் கிடைத்தது.

இது மட்டுமின்றி 94 பவுண்ட் எடைகொண்ட சந்திர மண்டல பாறைகள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்ததிலும் எட்கரின் பங்கு இன்றியமையாதது. அவற்றை அமெரிக்காவில் 184 விஞ்ஞானிகள் குழுக்களுக்கும், மற்ற 14 நாடுகளிலும் ஆராய்ச்சி செய்தனர்.

இதன் மூலம் நிலா குறித்த பல தகவல்கள் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்தது.

விண்வெளிக்குச் சென்று வந்த பின்னர், எட்கரின் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவிலும், அமெரிக்க கடற்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

நிலாவில் கால் பதித்து நடந்ததின் 45-வது ஆண்டு விழாவை கடந்த 5-ந் தேதி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 4-ந் தேதி மாலை புளோரிடாவில் எட்கரின் மரணம் அடைந்தார்.

Related Posts