Ad Widget

கொலம்பியாவில் 2000 கர்ப்பினிப் பெண்களுக்கு சிக்கா வைரஸ்

கொலம்பியாவில் சிக்கா வைரஸ் தொற்றிய 20,000 பேரில் 2000 பேர் கர்ப்பினிப் பெண்கள் என்று அந்நாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துளள்து.

நுளம்பினால் பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிகா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதாக எச்சரித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டில் 4 மில்லியன் பேர் இந்த நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதாக எதிர்வு கூறியுள்ளது.

இந்த வைரஸினால் பிரேஸில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதோடு இருபத்திற்கும் அதிகமான லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்று (01) கூடவிருக்கும் உலக சுகாதார அமைப்பு, சிகா சர்வதேச அவசர நிலையை ஏற்படுத்துமா என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts