பிரசல்ஸில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படம் வெளியீடு: உயிருடன் தப்பிய தீவிரவாதியை பிடிக்க தேடுதல் வேட்டை

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் படத்தை வெளியிட்டுள்ள போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். பிரசல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் சிசிடிவி கேமராக்களின்...

விமானம் விழுந்து நொறுங்கியது; தொழில் அதிபர் குடும்பத்துடன் பலி

பிரேசிலில் வீட்டின் மீது குட்டி விமானம் விழுந்து நொறுங்கி நேரிட்ட விபத்தில் தொழில் அதிபர், குடும்பத்துடன் பலி ஆனார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஆக்னெல்லி (வயது 56). அங்குள்ள சா பாவ்லோ நகரில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார். ஒரு வங்கியாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னாளில்...
Ad Widget

ரஷ்ய விமானம் விபத்திற்குள்ளானது : 59 பேர் பலி

துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ் நகரில் தரையிறங்கியபோது விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிக அதிக அளவு வெயில்-நாசா

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனமான கட்டார்டு இன்ஸ்டியூட்டின் இயக்குனர் கவின் ஸ்மிட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 100 ஆண்டுகளைகாட்டிலும் உலகில் பிப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில்...

கார் மோதி இலங்கையர்களான கணவன் -மனைவி மரணம்!

தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் நகரில் வேகமாகப் பயணித்த கார் மோதி, இலங்கையர்களான கணவனும் மனைவியும் பலியாகினர். வேகமான பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஹோட்டல் ஒன்றுக்கு சென்று விட்டு, நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்த இலங்கைத் தம்பதி மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஜொஹானஸ்பேர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரின் சாரதியும் இந்தச் சம்பவத்தில் பலியானார்.

லண்டனில் வாகனம் மோதி தமிழ்ப் பெண் மரணம்!

கடும்பனிப் புகார் காரணமாக லண்டன் மிற்சம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் நடுத்தர வயதுடையவரான சுகந்தி என்பவரே உயிரிழந்தவராவார். 'சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றும் இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார். பாதசாரிகளுக்கான நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதால் இவ்விபத்து...

இலங்கை பெண்க்கு குவைத்தில் மரண தண்டனை

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள்...

இ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.?

இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம்...

இமெயிலை கண்டுபிடித்தவர் காலமானார்

புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லாந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது, பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உட்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இமெயில்’ எனப்படும்...

மனித மூளையில் திறமைகளை சேமிக்க செய்யலாம்!!

திரைப்படங்களில் வரும் நம்ப முடியாத செயல்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு நிஜமாகி வருகின்றது. தற்சமயம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதை சாத்தியப்படுத்தும் முதல் ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களை வேகமாக படிக்க செய்யும் புதிய முறையை மனித மூளையில் நேரடியாக தகவல்களை வழங்கும் சிமுலேட்டர் ஒன்றை...

சுவிச்சர்லாந்தில் இருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்ப எதிர்ப்பு

சுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும்,...

நடுவானில் விமானி மாரடைப்பால் மரணம்! 220 பயணிகளை காப்பாற்றிய துணை விமானி

சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித் பின் முகமது அல்–முகமது ஓட்டி வந்தார். 34 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. கிங் கலித்...

அய்லான் மரணம்: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது....

சுவிசில் இருந்து ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்து!

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள ஈழத்தமிழர்கள் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக சுவிஸ் அகதிகள் சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இடம்பெற்றுவரும் நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது நாட்டில் புகலிடம்...

தமிழகம், புதுச்சேரியில் மே 16ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை...

பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முகேஷ் அம்பானி 36 இடம் வகிக்கிறார். 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810...

`பிரிட்டிஷ் தமிழ் மாணவியை காப்பாற்ற உலகளவில் கொடையாளிகள் தேடல்’

பிரிட்டனில் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பெண் ஒருவருக்கு, அவசரமாக ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு தேவைப்படுவதால், அதற்கான தேடுதல் உலகளவில் நடைபெற்று வருகிறது. அவரது உடலோடு பொருந்திப்போகக் கூடிய குருத்தணு நன்கொடை எவ்வளவு விரைவாகக் கிடைக்குமோ, அவ்வளவு விரைவாக அவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டிஃப் பல்கலைக்கழக மாணவியான...

ஐநா 31ஆவது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று (29) ஆரம்பமாகிறது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஆரம்பித்து வைப்பதுடன் உரையாற்றவுமுள்ளார். இவ்வுரையில் இலங்கை விஜயத்தின் போது பெற்ற அனுபவங்கள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்கு தண்டனை!

ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவுனர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சீர்செய்ய முடியவில்லை, இதனால் வாழ்வாதாரம் தேடிய...

பப்புவா நியூகினியா தீவில் 12கைதிகள் சுட்டுக்கொலை!

பப்புவா நியூக்கினியா தீவின் பெரிய நகரமான லேயிலுள்ள பயிமோ என்ற பெரிய சிறையிலிருந்து தப்பியோடிய பன்னிரண்டு கைதிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயிமோ சிறையின் முக்கிய நுழைவாயிலிற்கு அதிரடியாக நுழைந்த 94 இளைஞர்கள் அங்கிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து பொலிசார் அவ்விடத்திற்கு வந்து சுட்டத்தில் பன்னிரண்டுபேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 18பேர் காயமடைந்துள்ளனர்,...
Loading posts...

All posts loaded

No more posts