Ad Widget

கண் கலங்கி அழுத ஒபாமா!

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

President Barack Obama

இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் அவர் “ 3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதற்கு மேலும் சாக்கு போக்குகளை சொல்லி சமாளிக்க கூடாது. ஆயுதங்களை தாயாரித்து விற்கும் தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த உரையில் பள்ளி குழந்தைகள் பற்றி பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒபாமா கண் கலங்கினார்.

Related Posts