Ad Widget

அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததால்தான் நிலநடுக்கம்

வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது.

Kim_north-koreya

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.

இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று சற்று முன் தெரிவித்துள்ளது.

உலக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத கொடூரமான ஹிரோஷிமா நாகசாகியில் நடந்த போரில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஹைட்ரஜன் குண்டால் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது முறையாக வட கொரியா வெற்றிகரமாக அணு ஆயுத பரிசோதனை செய்தது நினைவு கூரத்தக்கது.

Related Posts