Ad Widget

ஜப்பானில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்!

ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ளது ஹொக்காய்டோ தீவு. அந்த தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஷிசுனாய் நகரில் இருந்து தென்கிழக்கில் 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 51 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

மேலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதிர்வு 40 நொடிகள் இருந்தது என்று அதை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாவிட்டாலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts