Ad Widget

உலக அழிவு ஆரம்பமோ? – 1.5 லட்சம் பென்குயின்கள் பலி!

அண்டார்டிகாவில் காமன்வெல்த் வளைகுடா பகுதியில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று ஒதுங்கியதால் சுமார் 1.5 லட்சம் பென்குயின்கள் கொல்லப்பட்டுவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகிவுள்ளது.

penguins-mourning

அண்டார்டிகாவில் காமன்வெல்த் வளைகுடா பகுதி 100 ஆண்டுகளுக்கு மேலாக பென்குயின்களின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட காமன்வெல்த் வளைகுடாவின் கரையோரத்தில் வசிக்கும் பென்குயின்கள் கடலில் இருக்கும் கூனிப்பொடிகளை உண்டு உயிர்வாழ்ந்து வந்தன.

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு 2900 சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்ட மிகப்பெரிய பனிப்பாறை காமன்வெல்த் வளைகுடா பகுதியில் ஒதுங்கியது. இந்த பனிப்பாறையானது இத்தாலியின் ரோம் நகரம் அளவுடையது. இந்த பனிப்பறை அந்த கடற்கரை முழுவதுதையும் அடைத்துவிட்டது.

இதனால் பென்குயின்கள் சுமார் 60 கிலோ மீட்டர்கள் ஆபத்தான வழியில் பயணம் செய்து தங்கள் உணவை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த நிலையால் சுமார் 1.5 லட்சம் பென்குயின்கள் இறந்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த பகுதியில் 10 ஆயிரம் பென்குயின்கள் மட்டும் உயிரோடு உள்ளன.

அண்டார்டிகாவில் அதிகளவில் பனிப்பாறைகள் நகர்வதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts