சக பணியாளரை கொலை செய்த இலங்கைப் பெண்

ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர், மற்றமொரு பணியாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப் பெண்ணையே அவர் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புஜாராஹ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குவாதத்தை அடுத்து, இரண்டு பேருக்கும் இடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தான் தாக்கியமையை இலங்கைப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார். மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related Posts