Ad Widget

ஸீகா (zika) வைரஸை ஒழிக்க விரைந்து செயற்படுக! ஒபாமா வேண்டுகோள்!

பிரேஸிலை மோசமாகத் தாக்கிக்கொண்டிருக்கும் ஸீகா (zika) வைரஸானது (கொசுவினால் (நுளம்பு) பரவி, பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது) தற்போது அமெரிக்காவையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

zika_prevention_virus-baby

இதனைத் தடுக்கும் முகமாக இதனை அழிப்பதற்குரிய மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு விரைந்து செயற்படுமாறு வைத்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்பமான காலப்பகுதியில் இந்நோய் அமெரிக்கா முழுவதும் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளதெனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நோய்த் தாக்கத்திலிருந்து தம்மை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டு மெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் இதுவரை ஒன்பது குழந்தைகள் இறந்த நிலையில் அண்மையில் இந்த வைரஸ் மோசமாகப் பரவிய நாடொன்றுக்குச் சென்றுவந்த வேர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Posts