Ad Widget

சர்வதேச அவசர நிலை பிரகடனம்

உலகில் பல நாடுகளில் வெகு வேகமாக பரவி பரவும் ஸிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஸிகா வைரஸ் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அவசர கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ காரணமாக 3 மூன்று முறை சர்வதேச அவசர நிலையை சுகாதார மையம் பிரகடனம் செய்திருந்தது.

தற்போது ஸிகா வைரஸ் காரணமாக 4-வது முறையாக அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஓலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் ஸிகா வைரஸ் காரணமாக, கர்ப்பினிகள் இங்கு வரவேண்டாம் என பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கர்ப்பினிகளை ஸிகா வைரஸ் வேகமாக தாக்குவதால் அவர்கள் இங்கு வரவேண்டாம் என பிரேசில் அமைச்சர் ஜாக்குஸ் வாக்னர் கூறியுள்ளார்.

Related Posts