- Saturday
- August 16th, 2025

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதுமில்லை.

இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை...

இங்கிலாந்தில் மாணவன் ஒருவன் ஆங்கில பாடத்தில் தவறாக எழுதிய ஒரு வார்த்தையால் பொலிசார் அம்மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர். இங்கிலாந்தின் Lancashire என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்த 10 வயது மணவன், தனது ஆங்கில பாடத்தில் நான் மாடி வீட்டின் வசிக்கிறேன்(Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன்...

லிபியாவில் கொள்ளையடித்த 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். கொள்ளை செயலில் ஈடுபட்டது, இஸ்லாமிய மதத்தில் இருந்து...

பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில், குறைந்தது 15பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000பேர் இருப்பதாகவும் தப்பிவந்தோரின் கருத்தின்படி சுமார் 60பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிக்கிரமாக சோதனை செய்தது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 250...

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் தர்ஷன பெரேரா கூறியுள்ளார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் சுமார் 130 இலங்கையர்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக எந்த தகவலும் இதுவரை இல்லை என்றும் அவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகர்...

ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ளது ஹொக்காய்டோ தீவு. அந்த தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஷிசுனாய் நகரில் இருந்து தென்கிழக்கில் 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை...

பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “பிப்ரவரி 4-ம் தேதி பேஸ்புக்கின் 12-வது பிறந்த நாள். இந்த ஆண்டு விழாவானது ஒரு சமூகமாக இணைந்து நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தும்...

போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான இரசாயனப்பூச்சு அட்டைப் பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்...

துபாயில் ஆளில்லாத வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை துபாயின் அல் பார்ஷா (Al Barsha) பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்த வேளை, 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள் மற்றும் 100,000 திர்ஹாம் பணம்...

மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது...

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன...

வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே...

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் அவர் “ 3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம்...

துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 34 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பல சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன. துருக்கிய...

இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22. மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தா். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக இங்கிலாந்து (மற்றும் வேல்ஸ்) கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு...

ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவின் புமலங்கா நகரைச் சேர்ந்த ஹம்ரி கோசா(25) என்ற வாலிபன் சில தினங்களுக்கு முன், தான் வழக்கமாக செல்லும் உள்ளூர்...

2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா...

All posts loaded
No more posts