அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் இணைந்து புதிய அமைப்பு

தற்போது இலங்கையின் பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள - வடமாகாணத்தைச் சேர்ந்த - அரசியல் கைதிகளினதும் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, 'தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் - வடமாகாணம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பின் தலைவராக கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி செல்லையா பவளவள்ளி (தொலைபேசி இலக்கம் 0774823465),...

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

புனர்வாழ்வளிக்கப்பட்ட வட மாகாண முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார். யாழிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
Ad Widget

சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவீர்கள்!

நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை பிரிட்டன் அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,...

சர்வமத குழு யாழுக்கு விஜயம்; மக்களது துன்பங்களையும் நேடியாக பார்வை

யாழ்ப்பாணத்திற்கு வந்த சர்வமத குழுவினரிடம் அரசியல் கைதிகள் விடுதலை ,மீள்குடியேற்றம் என்பன துரித கதியில் இடம்பெற வேண்டும். அதற்கு சர்வமத குழுவினரின் பங்களிப்பும் அவசியம் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். தென்மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமத குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து உயர்பாதுகாப்பு வலையம், நலன்புரி முகாம்கள் , முஸ்லிம்...

மா, சீனி உள்ளிட்ட 13 பொருள்களின் விலை குறைப்பு

மா, சீனி உட்பட 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களின் விலை விவரம் வருமாறு:- சீனி - 10 ரூபாவாலும் - 400 கிராம் பால் மா - 325 ரூபாவாகவும் சஸ்டஜன்...

காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத் தாருங்கள்; வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் சுன்னாகம் நலன்புரி நிலைய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதம நீதியரசராக ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானம்!

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை - இன்று நள்ளிரவுடன் ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க தாம் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் பிரதம நீதியரசர் வெற்றிடத்துக்கு...

அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு!

அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றில் தற்போது மினி வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி...

கல்விக்கு 6% நிதி, மண்ணெண்னை மேலும் 6 ரூபாவால் குறைப்பு

இலங்கையின் கல்வித் துறைக்கு தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

பா.உறுப்பினர்களுக்கான பரவலாக்கப்பட்ட நிதி 50% உயர்வு

விவசாயிகளுக்கு தொடர்ந்தும் உர மானியம் வழங்கப்படும் என்றும் உலர்ந்த பால் ஒரு லீட்டர் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட நிதி 5 மில்லியனில் இருந்து 10 மில்லியன்வரை அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஓய்வூதியம் 1000 அதிகரிப்பு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000 கொடுப்பனவு

ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50% குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ்! மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் புதிய தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் இருந்து...

தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு

தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஊழியர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாடுபடுவதா அவர் குறிப்பிட்டுள்ளார்

வடமாகாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்

வடமாகாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை இதய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதய நோய்க்குரிய ஏதுநிலைக் காரணிகளின் ஒன்றாக நீரிழிவு நோய் இனம் காணப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் நீரிழிவு நோய் என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் நீரிழிவு நோயாளிகள் அதிகம். அதிலும்...

கௌதாரிமுனை மணல் அகழ்வு தடுப்பு

முறையற்ற வகையில் அனுமதி பெறப்பட்டு பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 'பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை...

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் – நிதியமைச்சர்

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார். இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும். எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும். நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம்....

100 நாட்கள் சவாலானது – பிரதமர்

100 நாட்கள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் சவால்மிக்க நடவடிக்கையில் இரவு பகல் பாராது உழைத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாம் செய்யும் வேலையையே பார்க்க வேண்டும். தவிர, நாட்கள் குறித்து எண்ணிக்கொண்டிருக்க கூடாது என்றும் பிரதமர் கூறினார். தனது உரைக்குப் பின்னர், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், இடைக்கால வரவு - செலவுத் திட்டம்...

இராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய அரசு ஆட்சிப்...

இடைக்கால புதிய பட்ஜட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு :3 மடங்கினால் விலைகள் குறைப்பு

இன்றைய தினம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சறிசேன அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும். ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். இதனையடுத்து நிதியமமைச்சர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவார் பிற்பகல் 1.15...
Loading posts...

All posts loaded

No more posts