Ad Widget

தமிழீழ விடுதலைப்புலிகள் விட்டுச் சென்றதே கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய அமைப்பாக மாபெரும் ஜனநாயக சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு சென்றுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

Sivasakthi-Ananthan

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது மண்ணில் நடந்து முடிந்த விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தளமாக புதுக்குடியிருப்பு பிரதேசம் விளங்கியுள்ளது. பல்லாயிரம் போராளிகள் நிலைகொண்டிருந்த இடம்.

போருக்கு பின்னர் பெருமளவு மக்களின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. எமது அரசியல் உரிமைகளை பெறுவதற்கு இந்த காரியாலயம் செயற்படும். 28ஆம் திகதிக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவார்கள்.

இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு மீண்டெழவேண்டும். நடைபெற்ற போர் பல இழப்புக்களை எமக்கு விட்டுச்சென்றுள்ளது.

இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து எமது அரசியல் தலைமைத்துவத்தை தக்கவைப்பதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts