Ad Widget

இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

இலங்கை-இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி சென்னையில் நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழக மீனவர்களின் இழுவை படகுகளே இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அரசாங்கம் முன்வைத்த மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பேச்சுவார்த்தையை பிற்போடுவதற்கு இலங்கை தரப்பால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருக்கின்றது.

தமிழகம் – இலங்கை மீனவர்களிடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாக்கு நீரிணையில் தமிழர்களுக்கு இருக்கும் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமை, சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவாக விடுவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கொழும்பில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழக மீனவ குழுவினர் 13 பேரும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்வார்கள் என்று மீன்வளத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலேயே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related Posts