Ad Widget

தொடர்ந்து கொட்டும் மழையால் யாழ்.மாவட்டத்தில் 32 ஆயிரம் பேர் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 47 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 11 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்னர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 4 முகாம்களிலும், யாழ்....

யாழ் உப இந்திய தூதரகத்திற்கு புதிய கொன்சியுலர் ஜெனரல்

கடந்த மூன்று வருடங்களாக கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிய ஏ.நடராஜா யாழ் இந்திய துணைத் தூதரககத்தின் கொன்சியுலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ் உப உயர்ஸ்தானிகராலயத்தில் பதவியேற்கவுள்ள அவர் கண்டியில் பணியை நிறைவு செய்ததன் பின்னர் கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம். காமினி செனவிரத்னவை சந்தித்து சேவை காலத்தில்...
Ad Widget

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படல் வேண்டும் – சூசையானந்தன்

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள்...

டெங்கு ஒழிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபட்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கிராம மக்கள் அனைவருக்கும் ஒலிபெருக்கி மூலமாக டெங்கு நுளம்பு பெருக தக்க கழிவுப்பொருட்களை சேகரித்து பொதி செய்து வைத்துகொள்ளுமாறு முன்னதாகவே அறிவுறுத்தபட்டு, வலிவடக்கு பிரதேச சபையின் வாகனத்தின் உதவியுடன் வருத்தப்படாத வாலிபர் சங்க...

கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுடனான சாந்திபில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன்போது...

எனது அரசில் குறைகள் உண்டு – மகிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன்....

வியாபாரிமூலையில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

பருத்தித்துறை, வியாபாரிமூலை கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அருகிலுள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இக்கிராமத்துக்கு பின் பகுதியில் சிறு பயிர்ச்செய்கை செய்கின்ற விவசாய...

யாழில் 496.4 மில்லிமீற்றர் மழை

யாழ். மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 496.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன், திங்கட்கிழமை (01) தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி 120.3 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. இதுவே இந்த வருடத்த்தில் அதிகூடியளவில் மழை...

தாலிக்கொடி திருடியவர் கைது

தொண்டு நிறுவன ஊழியர் எனக்கூறி சேந்தாங்குளத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அப்பெண்ணின் கைப்பைக்குள் இருந்த தாலிக்கொடியை திருடிய சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இளவாலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வீடு ஒன்று கட்டிக்கொண்டு,...

‘நல்லூரை பாதுகாக்க வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்’- செ.கிருஸ்ணராஜா

வடமாகாண சபை தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தின் துணையோடு நல்லூர் என்ற புனித நகரத்தையும் அதன் பண்பாட்டு சிறப்பையும் அதனோடு இணைந்த பண்பாட்டு எச்சங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பதில் தலைவர் செ.கிருஸ்ணராஜா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை...

‘ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தவும்’

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் மாகாண கல்வி திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். வன்னி போன்றே வலிகாமம் கல்வி வலயமும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எமது கல்வி வலயத்தில் பாட ரீதியான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில் வன்னிப் பகுதிக்கு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டமைப்பினர் உதவி

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகிய வடமராட்சியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உலர் உணவுகளை வழங்கினர். வடமராட்சியிலுள்ள இராஜகிராமம், பொலிகண்டி மற்றும் தும்பளை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான உலர்...

வரட்சிப் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நஷ்டஈடு

கடந்த 2013ஆம் ஆண்டு நிலவிய வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,761 யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய காப்புறுதி நிதியத்தால் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ககமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞ்சன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் அழிவின் தன்மை மற்றும் அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்குவதற்கான...

மூழ்கிய படகு மீட்டு தரப்படும் – மாவை

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் மீண்டும் கரையொதுங்கிய மீனவர்களின் மூழ்கிய படகு மற்றும் வலைகளை மீட்டுக்கொடுப்பதுடன், அந்த மீனவர்கள் தொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம்...

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். வல்வெட்டித்துறை பொலிஸ் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவினை ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார். எனினும் நீண்ட நாட்களாக...

உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளேன் – சந்திரிக்கா

உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்

வடக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னாவதென்பதையும் வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் பலம் அரசாங்கத்திற்கு தெரியாவிடின் கடந்த கால தேர்தல் முடிவுகளை மீட்டுப்பாருங்கள் என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்...

டெங்கு தொற்றுக்கு 9 பேர் நேற்று அனுமதி

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும், கோப்பாய் மற்றும் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து தலா மூவருமாக ஒன்பது பேர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இந்தமாதம் யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைக்கு...

மத்திய அரசு மட்டுமல்ல மாகாண அரசும் எங்களைக் கைவிட்டதாகவே உணர்கிறோம்! வலி.வடக்கு மக்கள் வேதனை!!

மத்திய அரசாங்கத்தினால் மட்டுமல்ல வடக்கு மாகாண அரசாலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர். நேற்று இப்பகுதி மக்கள் மழையால் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் இருக்க இடம்கூட இன்றி அந்தரிக்கும் இந்த மக்கள்,...
Loading posts...

All posts loaded

No more posts