Ad Widget

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் பருத்தித்துறை நகர சபை குப்பைகளை கொட்டுகிறது

பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தும்பளை பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நகர சபையால் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

நகர சபை தவிசாளர் சபா ரவீந்திரனுக்கு சொந்தமான காணியொன்றிலே இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன.

இதனால் தங்களுக்கு வீடுகளைச் சூழ்ந்து புகைமூட்டம் காணப்படுவதுடன் காற்றுடன் தூர்நாற்றமும் கலந்து வருவதாக மக்கள் கூறினர். குப்பைகளுடன் கொட்டப்படும் கழிவுகளை நாய்கள் தூக்கி வந்த தங்கள் வீடுகளுக்கு போடுவதாகவும் மக்கள் கூறினர்.

இது தொடர்பாக பிரதேச சபையிடம் வினாவியபோது,

நகர சபையால் சேகரிக்கப்படும் குப்கைகள் முன்னர் ஆனைவிழுந்தான் மயானபகுதியில் கொட்டப்பட்டு வந்தன.

ஆனைவிழுந்தான் பகுதி நன்னீர்ப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமையால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் காரணமாகவே தற்போது இந்தக் காணிக்குள் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகள் கொட்டுவதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அந்தக் காணிக்குள் குப்பைகள் கொட்டப்படமாட்டாது என்று கூறினர்.

Related Posts