Ad Widget

சுமந்திரன் கொடும்பாவி எரிப்பு தொடர்பில் வடமாகாணசபையில் விவாதம்!

வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார்.

இதற்கு ஆதரவாக பேசிய  பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது குறுக்கிட்ட மற்றொரு உறுப்பினர் அனந்தி சசிதரன் காணாமல் போனவர்களை தேடித்திரியும் அவர்களது குடும்பங்களிற்கே அதன் வலி தெரியும். ஜ.நா விசாரணை அறிக்கை மூலம் நல்லதொரு தீர்வு தமது விடயத்தில் கிடைக்குமென அவர்கள் காத்திருந்தனர். ஆனால் இப்போது சிலர் உள்ளக விசாரணை பற்றி பேசுகின்றார்கள்.

ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவிற்கும் அதே போன்று காணாமல் போனவர்களை தேடிக்கண்டறியும் குழு விசாரணைகளிற்கு நடப்பது அனைவரிற்கும் தெரியும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதனை சிலர் அப்போது செய்திருக்கலாமென அனந்தி தெரிவித்தார்.

காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஜெனீவாவிற்கு எடுத்து செல்லுமாறு மகஜரொன்றை தரப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதை பெற்றுக்கொள்ளவே அங்கு சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அன்ரனி ஜெகநாதனின் பேச்சிற்கு குறுக்கிட்டு விளக்கமளிக்க மற்றொரு உறுப்பினரான சர்வேஸ்வரன் முற்பட்ட போது அதற்கு அவைத்தலைவர் அனுமதித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது..

இந்நிலையில் இராணுவம் பிடித்து காணாமல் போனதற்கு சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பதானால் புலிகள் பிடித்து சென்றவர்களிற்கு யாருடைய கொடும்பாவியை எரிப்பதென அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தன்னை மாவீரர் குடும்பமென அடையாளப்படுத்தியே அன்ரனி ஜெகநாதன் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டெனீஸ்வரன் விசாரணை அறிக்கை தொடர்பில் தாமதம் வேணடாம் என்று கோரும் பேரணியில் இறுதி நேரத்தில் பரிவாரங்களுடன்  நீள பர்தாவுடன் வருகை தந்திருந்தார் பின்னர் வடமாகாணசபையில் குறித்த தீர்மானம் குறித்து சுமந்திரன் அவர்கள் கூறிய கருத்துக்களினால்  கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்னிறில் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதற்கு எதிராக கண்டணத்தினை தெரிவித்திருப்பது அவரது இரட்டை வேடத்தினை காட்டுவதாக உள்ளது என என  அவதானிகள் தெரிவிக்கின்றனர்

கூட்டமைப்பு அரசியல் வாதிகள் பலரும் சுமந்திரன் நடவடிக்கைகள் தொடர்பில் அடக்கி வாசிப்பதாகவும் அது அடுத்த தேர்தலில் தமக்கான இடத்தினை தக்கவைப்பதற்கான நடவடிக்கையாக இருக்கலாம்  எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாணசபை உறுபப்பினர் ஒருவர்  தெரிவித்தார்

Related Posts