Ad Widget

வடமாகாண சபையின் அவை அமைப்பு மாற்றப்படவுள்ளது

வடமாகாண சபையின் அவை அமைப்பை மாற்றுவதுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற போதே, அவைத்தலைவர் இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

அவை நடவடிக்கை இடம்பெறும் போது அவைக்கு குறுக்கே செல்வதுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை. நாடாளுமன்றத்தில் அவைக்கு குறுக்கே சென்றால் அது எதிர்க்கட்சி உறுப்பினர் என்றே கருதப்படும்.

ஆனால், வடமாகாண சபை அமைப்பில் வேறு வழியின்றி உறுப்பினர்கள் குறுக்கே செல்லவேண்டியுள்ளது. இது தொடர்பாக ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டும். இது தொடர்பாக பொறியியலாளாருடன் பேசியுள்ளோம். கலாந்தாலோசித்து மாற்றம் செய்யப்படும் என்றார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இருக்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.தவநாதன் கூறினார். முதலமைச்சர் இருந்து எழும்பும்போது சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எனவே மாற்றம் அவசியம் என்றும் கூறினார்.

Related Posts