- Friday
- September 19th, 2025

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வான்கள், பஸ்கள், ஓட்டோக்கள் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அரச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவும் பொலிஸாரும் இணைந்து இன்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது நூற்றுக்கணக்காக வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது வீதிப் போக்குவரத்தில் ஈடுபடத் தேவையான ஆவணங்கள், வாகனங்களுக்கான தகுதிகள் பரிசோதிக்கப்பட்டன. இவ்வாறு போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், தொடர்ச்சியாகச் சேவையில்...

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

நெல்லியடி நகர்ப்பகுதியில் மதுபான நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, வியாழக்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், அந்தோனியாரின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த...

நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் காலப்போக்கில் இதுபற்றி அறிவித்தல் வெளியிடப்படும் என பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடந்த 3ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிதி...

நாடாளுமன்றம் அடுத்த 7அல்லது 10 நாட்களுக்குள் கலைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசு அமையப் பெற்று 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு மேலாகக் கூட்டப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குறித்த கூட்டங்களிலேயே...

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும். அந்த வகையில் மல்லாகம் பகுதியில்...

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறுவர் தொழிலை எதிர்ப்போம் என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குழந்தை தொழிலாளர் முறை முற்றாக...

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளிநாடு செல்லும் பெண்கள், தங்களது குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டும் எனும் நடைமுறை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் பெண்களுக்கே இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. 5...

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் அனைவரும் மீளவும் நாட்டிற்கு வருகை தரவேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என்ற பேதம் பாராமல் அனைவரும் புலம்பெயர்ந்த இலங்கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்கியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது திட்டமிட்ட சிலருக்கே பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. எனினும் தற்போது...

ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில்...

வாக்குமூலம் அளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்

தலைமன்னார், ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் மரத்தில் செதுக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை கரையொதுங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (10) மாலை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர்,குறித்த இடத்துக்குச் சென்று சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்துக்குக் கொண்டு...

வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதை தான் மறுப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படும். வடக்கில் இருக்கின்ற இராணுவத்தின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொர்பில் தன்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, 18 சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இந்த கூட்டத்தின் போதே தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக 18 சிறுப்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்செட்ச் ஹோட்டலில்,...

மருதனார்மடத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்களை தற்காலிமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் பெரும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம்...

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 5,754 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதிகட்ட யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்களுக்கே இந்த சுயதொழில ஊக்குவிப்பு கடன் வழங்கப்படவுள்ளது. குறித்த முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க 2012ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதன் கீழ் கடந்த...

பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பெயரை “நீலோத்பலம்” என பெயர் மாற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இது...

யாழ். நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யப்பட்ட இருவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பெறப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இவ்விரு சந்தேகநபர்களையும் கைது செய்திருந்தனர். இவர்கள் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, நாளைவரை விளக்கமறியலில்...

வவுனியா பிரதேச வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 9ம் திகதி காலை முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 வயது ஆண் பிள்ளை இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பிள்ளையை விடுவிக்க கடத்தல்காரர்கள் 30 லட்சம் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

All posts loaded
No more posts