- Friday
- September 19th, 2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சக்தி வாரம் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. "நாளைய சமூகத்திற்காக இன்றே நாம் சக்தியை சேமிப்போம்" எனும் தொனிப் பொருளில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இன்று (11) காலை சக்திவார அனுஷ்டிப்புக்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. பாடாசலையின் சக்தி...

கடந்த வருடம் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நன்னடத்தை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலமாக நடாத்தப்பட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தின் சிறுவர் கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இலக்கம் 176, பனிப்புலம், திருநாவுக்கரசு சிறுவர் கழகம்...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குடன் தொடர்புடையவர் என மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் நாட்டு வதிவிடப் பிரஜை தொடர்பில், வடபகுதியிலுள்ள பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 9ஆவது சந்தேகநபரான மேற்படி சுவிஸ் வதிவிடப் பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

தெல்லிப்பளை, துர்க்காபுரம், 8ஆம் கட்டை பேரம்பலம் வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (13) நடைபெறவுள்ள கேள்வியின் போது வெட்டப்படும் ஆடுகளுக்கு கிராமஅலுவலரிடம் உரிமைச் சான்றிழ்களை பெற்றுவருமாறு ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலையில் நடைபெறவுள்ளது. அதிகாலை நடைபெறும் படையல்களைத் தொடர்ந்து ஆடுகள், சேவல்கள் பலியிடும் நிகழ்வு...

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாவும் ஏனைய கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிக்குமாறும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர்களின் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீண்டகாலத்தின் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணைக்குட்படுத்தப்படும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை அடையாளம்...

தங்களை இராணுவ புலனாய்வாளர்கள் எனக்கூறி சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மிரட்டிய மூவரை நேற்று செவ்வாய்க்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைதடி வீதியில் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை சிவில் உடையில் வீதியில் நின்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோதனை செய்து செய்ய முயன்ற போது,...

இளவாலை பனிப்புலம் பகுதியில் தனது 13 வயது மகனை அடித்துக் கண்டித்த குற்றச்சாட்டில் தாய் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். மகன் படிப்பில் அக்கறை காட்டாமல் இருந்ததைக் கண்டித்து தாய் மகனை அடித்துள்ளார். இதனால் வீட்டை விட்டுச்சென்ற மகன், உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு காலையில் எழுந்து முதல்நாள் இருந்தபடியே பாடசாலைக்குச்...

அயல் வீட்டு புதுமனைப்புகு விழாவுக்கு வழங்கிய 1,000 ரூபாய் மொய்ப்பணத்தை திரும்பத் தருமாறு கோரி அயல் வீட்டுப் பெண்ணை தாக்கிய, மற்றொரு பெண் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (09) பொலிஸ் நிலைத்தில முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பத்தமேனி பாரதி வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அயல் வீட்டில்...

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நிலையான ஏற்பாடுகள் அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 'வடக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்தகால தவறான தமிழ்த்...

புலம்பெயர் தமிழர் அமைப்புகள், தனிநபர்களுக்கு இலங்கை அரசாங்கம் விதித்த தடை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். நேற்று வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சில் அவர் நடத்திய அமைச்சில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் கடந்த வருடம் உலகத் தமிழர்...

"அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தின் தற்போதைய வடிவம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் எடுத்துரைக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

வடமாகாண - யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்:- யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ்...

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழங்கைக்கு கீழ் கைகளை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் செயற்பாட்டு திறனுடைய செயற்கைக் கை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைபொருத்தும் நடவடிக்கைகள் கல்லூரி வீதி , நீராவியடி , யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நாளை வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல்...

யாழ்பாணத்தின் பாதுகாப்புக்கு தேவையான இராணுவ முகாம்களை தவிர அங்கு காணப்பட்ட 59 இராணுவ முகாம்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவத்தின் வசமிருந்த 12,901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி கூறியுள்ளார். யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் விற்பனை செய்தார்...

ஏழாலை பூதரவாயர் கோவிலடியில், செவ்வாய்க்கிழமை (09) மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரிடமிருந்து அடித்துப் பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், சில உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (10) காலையில் ஏழாலை மகா வித்தியாலயத்துக்கு முன்பாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சுன்னாகத்தில் இரும்புக் கடை வைத்திருக்கும் ஒருவர், இரவு வேலை முடிந்து தனது ஏழாலையிலுள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது,...

வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள...

படுகொலைகளை எவ்வாறு செய்வது, குற்றச்செயல்களை எவ்வாறு புரிவது என்பதை விளக்கமாகச் சொல்லிக்கொடுக்கும் பத்திரிகையொன்றை அரசாங்கம் அச்சிட்டு வருகின்றது. குற்றங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்று பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிப்பதன் மூலம், மேலும் பல குற்றங்கள் செய்ய வழிசமைத்துக்கொடுக்கப்படுகின்றன என்று பிரபல திரைப்பட இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்தார். 'வித்தியாவின் பின்னர் நாம்?' என்ற தொனிப்பொருளில், கொழும்பு, பொரளை...

வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட 198 தீர்மானங்களில் 41 தீர்மானங்களுக்கு இடைக்காலம், முழுமையான பதில்கள் கிடைத்துள்ளன என அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, கடந்த மாகாண சபையின் அமர்வில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மூன்று தீர்மானத்திற்கு மாத்திரமே பதில் கிடைக்கப்பெற்றுள்ளது என உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் கடந்த 21.05.2015...

All posts loaded
No more posts