Ad Widget

யாழில் திரியபியச வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காசோலை வழங்கிவைப்பு!

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற குடும்பங்களிற்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஆரம்பகட்ட நிகழ்வு அண்மையில் (24) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

home-loan-cash

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திரியபியச வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் இம்முறை யாழ் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை யாழ் மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டத்தில் யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 45 குடும்பங்களிற்கு வீடுகளை அமைப்பதற்கென முதற்கட்ட காசோலை பயனாளிகளிற்கு நேற்று(24) வழங்கப்பட்டது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் இக்காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

“திரியபியச” வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியிலும் 30 பயனாளிகள் இவ்வருடம் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Related Posts