- Friday
- September 19th, 2025

யாழ் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிற்கு சமீபமாக ஐஸ்கிறீம், வெற்றிலை போன்றவற்றை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கிறீம், வெற்றிலை போன்றவற்றை விற்பனை செய்யும் சாக்கில், பான் பராக் மற்றும் போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு...

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று புத்தளம் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்தாண்டு நிறைவுக்குள் தமது மீள்குடியேற்றத்தை தமது முன்னைய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த மக்களுடைய அனைத்து செயற்பாடுகளையும் வடமேல் மாகாணத்துடன் இணைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்...

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வடக்கு மாகாண சபையே செயற்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவினால் அவசர பிரேரணையாக கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாணத்தில்...

குறிப்பிட்ட சில இளைஞர்களின் நடவடிக்கைகள் காரணமாக ஏழாலை, மல்லாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் மக்கள் நடமாடவே அச்சம் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வீதியால் செல்பவர்களை தாக்குவது, வீடுகளுக்கு கல்லெறிவது, வீதியோரங்களில் உள்ள கழிவுப்பொருள்களை எடுத்து நடுவீதியில் போடுவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக பொது மக்கள் இரவு வேளைகளில் நடமாடுவதையும் தவிர்த்து வருகின்றார்கள்....

பொருளாதா அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உள்ளிட்ட மூன்று நீதவான்கள், சற்றுமுன்னர் உத்தரவிட்டனர். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோடி தொடர்பில், பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக,...

வடக்கில் தற்போது அதிகரித்துள்ள மனித நேயமற்ற கலாச்சாரத்திற்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக உள்ளது. எனவே வடக்கில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மது விற்பனை நிலையங்களுக்கான உரிமத்தினை மீள்பரிசீலணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேறியது. வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது....

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவை சேர்ந்த நபர் ஒருவரை குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். நாயினதீவை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முற்படுத்தி...

மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் கடத்தப்படவில்லை எனவும், யாழ். நீதிமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பார்த்தீபன், யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ். நீதிமன்ற கட்டடம் தாக்கப்பட்ட...

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தின் கட்டளை பணியகத்தில் கடமையாற்றிய முகாமைத்துவ உதவியாளரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் திங்கட்கிழமை (08) உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய கட்டளை பணியகத்தின் நிதிப்பிரிவில் கடந்த ஆண்டு காலப்பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கவேண்டிய 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாயை பணம் மோசடி...

யாழ்ப்பாணத்தில் கடந்த மே மாதம் நடுப்பகுதியில் பெய்த மழை காரணமாக வெங்காயச் செய்கையானது அழிவடைந்தமையால், தற்போது ஒரு அந்தர் (அண்ணளவாக 50 கிலோ) வெங்காயம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வலிகாமம் பகுதியில் அதிகளவான வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் பெரும்பாலானவை அழிவடைந்துள்ளன. இதனால் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. வடமராட்சிப் பகுதியில்...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தால் சிறந்த வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு வீரசிங்கம், மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி க.சர்வேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார். இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி கல்யாணி தகநாயக்கா...

புதிய தேர்தல் விதிகளின் பிரகாரம் யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 196 தேர்தல் தொகுதிகளில் 35 தேர்தல் தொகுதிகள் ஒரே சமயத்தில் குறைக்கப்படுவதனாலேயே இந்த நிலை உருவாகும் எனவும் அந்த...

வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பதானது வரவேற்கத்தக்கது. அதேநேரம், போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கது. அத்துடன், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதாக பல்வேறு...

கணவரால், மனைவி அடித்து துன்புறுத்தப்பட்டதைப் பார்த்து கொண்டிருந்த வளர் ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவேசமாகப் பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. வளர்ப்பு நாயின் கடிக்கு உள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த நப ரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன் கீறல்...

அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார். ஈ.பி.டி.பியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த இவர் அச்சுவேலிப் பொறுப்பாளராகவும் கடமையாற்றி வந்ததுடன் வலி.வடக்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்...

வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 15 பள்ளி மாணவர்களை கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி...

வட மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கின் அபிவிருத்திக்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி உதவி வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய ஜனாதிபதி,...

கடந்த காலத்தில் மாயவலை விரித்து ஆடம்பரங்களையும் கட்டற்ற கலாசாரத்தை சீரழிக்கும் விடயங்களையும் பரவவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பின் அறுவடைகளை நாம் இன்று அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எமது இளைய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி...

வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர். வடக்குமாகாண சபையின் 30 ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதன்போதே இந்த ஆட்சேபனையினை வெளியிட்டனர். வவுனியா அரச அதிபர்...

இன்று காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55 என்பரே ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவார். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் சடலமானது யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

All posts loaded
No more posts