Ad Widget

யாழில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று !! பெண் ஒருவர் பலி! மேலும் 20 பேர் சிசிச்சைக்கு அனுமதி!!

இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு யாழ். போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

இதேவேளை, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 9 சிறுவர்கள், 6 கர்ப்பிணிகள் உட்பட 20 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

மேலும் பலர் இந்நோய்க்குச் சிகிச்சை பெற்று பலர் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இம்புளுவன்ஸா வைரஸ் தொற்று பெரிதளவில் தாக்கத்தினை செலுத்தியிருக்காவிட்டாலும், பொது மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 3 வாரங்களாக இம்புளுவன்ஸா தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

எனவே இந்த வைரஸ் தொற்றுக்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக கர்பிணித் தாய்மார் சாதாரண காய்ச்சல், மூக்கால் நீர் வடிதல் போன்ற தன்மை காணப்பட்டால் உடனடியாக தகுந்த வைத்தியசாலையினை நாடி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைகளையும் பெற்றோர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இத் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது என சந்தேகம் கொள்பவர்கள் மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களிற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பணிப்பாளர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts