Ad Widget

யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் !

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (U.N.D.P) industrial Service Bureau (ISB) உடன் இணைந்து யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இளையோர் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கிலும் அவர்கள் சார்ந்த சுயதொழிலை ஆரம்பிக்க ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்படி செயற்றிட்டம் நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள வேலனை, கரவெட்டி, பருத்தித்துறை, காரைநகர், உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 125 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர்.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் 25 இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு, சிறப்பான வியாபாரத்தை அபிவிருத்தி செய்தல், வெற்றிகரமான ஒரு வியாபார திட்டத்தை உருவாக்குதல், நிதியை திரட்டுவதற்காக நிதி நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்துதல், அல்லது பொருளுதவிகளை பெறுதல் மற்றும் ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக உருவாகுவதற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்கக்கூடிய அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தல் ஆகிய பிரிவுகளில் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயதொழிலில் ஆர்வமுள்ளவராகவும் குறித்த பிரதேசத்திற்கு உட்பட்டவராகவும் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பிக்க விரும்புவோர் குறித்த பிரதேச செயலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று அதை பூர்த்திசெய்து அப்பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அல்லது மாவட்ட செயலகத்திலுள்ள U.N.D.P அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலக U.N.D.P அலுவலகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts