Ad Widget

உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான இராணுவத்தின் கருத்துக்கு சர்வதேச நெருக்கடி குழு பதிலடி!

மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற எண்மர் கொலைகளுடன் தொடர்புடைய இராணுவத்தினர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை எங்ஙனம் சிறப்பாக இயங்குகின்றதென்பதற்கு இது சான்று பகர்கின்றதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதேவிதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

alan keenan

இராணுவப் பேச்சாளரின் கருத்து தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் அலன் கீனன், “இலங்கையில் நீதி செயற்படுத்தப்படுகின்றது என்பதை அரசு படம் பிடித்துக் காண்பிப்பதற்கு கீழ்மட்டத்திலுள்ள படையினருக்கு எதிராக 15 வருட காலத்திற்கும் நீண்டகால வழக்கு விசாரணைகள் தேவையாக இருக்கும்” – என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts