Ad Widget

அப்துல் கலாம் இலங்கையில்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார்.

Abthul - Kalaam

மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்த பயணத்தின்போது இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் அப்துல் கலாம் “இலங்கையின் எதிர்கால தலைவர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

Related Posts