- Sunday
- July 26th, 2026
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்படவில்லை எனவும், அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
மிரிஹான வெள்ளைவான் சம்பவமானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு வெள்ளைவான் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் களத்தைப் பெரும் பரபரப்பாக்கியுள்ளது. இராணுவ இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வாகனமொன்றிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிறிதொரு இலக்கத்...
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 566,823 பேர் தகுதிபெற் றுள்ளனரென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்தவகையில் அதில் 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான...
தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற் காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் மக்களுக்னும் சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று அவரின் இல்லத்தில் கடந்த வியாழன் மாலை நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நூற்றுக்...
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானபம் அமையப் பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கூட்டமைப்பின் தேர்தல்...
யாழ்ப்பாணம் தேர்தல் அதிகார பிரதேசத்துக்குள் மட்டும் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த தங்களுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும்வரை, பொதுத்தேர்தல் நடத்துவதை இடைநிறுத்திவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்தவிருந்த தேர்தலையே இடைநிறுத்துவதற்கான உத்தரவை தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினருக்கு பிறப்பிக்குமாறு அந்த மனுவில்...
அக்குரஸை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் எச்.எஸ்.ஜீ.சமிந்த என்பவர், மாத்தறையின் நேற்று (24) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அக்குரஸையை வசிப்பிடமாகக் கொண்ட அவர், மேற்படி சம்பவம் தொடர்பில் கூறியதாவது, 'அந்த கூட்டம் இடம்பெற்ற போது...
கதறி அழுத தாயைப் பொருட்படுத்தாமல் காதல் கணவனுடன் சென்ற 17 வயது சிறுமியைப் பார்த்து நீதிமன்றமே நிசப்தமாகிப் போன சம்பவம் ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தைப் பார்த்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் "பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாசாரம் சீரழிந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது." என்று...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்வார். இவருடன் யாழ். மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொள்வர். இதைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் தேர்தல் பிரசாரக்...
"தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைந்துகொள்ள எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்கவேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது. இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 506 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில்,...
தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள்செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (23) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்அறிமுகமும் ஊடகவியலாளர்சந்திப்பும் நடைபெற்றது. அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...
சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள்...
வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய பூசகர் ஒருவரை வியாழக்கிழமை (23) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு தொகை சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுவது கோமாளித்தனமான செயல் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமை மற்றும் வியாழக்கிழமை (23) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அவைத்தலைவரிடம் விளக்கம் கேட்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட2ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கேவலமான ராகிங் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட விஞ்ஞான பீட மாணவர்கள் கேவலமான பகிடிவதை ஒன்றை மேற்கொள்வதற்காக 1ஆம் வருட மாணவர்களை வெட்டாந்தரையில் முழங்காலில் மண்டியிட்டு இருக்குமாறு செய்துள்ளனர். இதன் பின்னர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கிலியன் தோப்பில் 31ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். அன்றைய தினம் காலை மன்னாரிலும், மதியம் வவுனியாவிலும் நடைபெறவுள்ள தேர்தல்...
இலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க...
அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகன் திருவளவன் (வயது 18) என்ற இளைஞனை நேற்று வியாழக்கிழமை (23) மாலை 2 மணி முதல் காணவில்லையென அவரது தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண நகரத்திலுள்ள தனது அலுவலகத்தில் இருந்து, அரசியல் பணியை மேற்கொண்டிருந்த தனது மகன் காணாமற்போயுள்ளதாக தந்தை...
Loading posts...
All posts loaded
No more posts
