Ad Widget

தாம் செய்த ஊழல்களை மூடி மறைப்பதற்காகவே பிரதமர் பதவிக்கு வரத் துடிக்கிறார் மஹிந்த!

தாம் செய்த ஊழல்களை மூடிமறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவிக்கு வரத்துடிக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்.பியு மான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என மெதமுலனையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

அரசின் காலத்தில் இந்த நாட்டில் பெரும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்பாராத வண்ணம் கடந்த ஜனவரி 8ஆம் திகதி தோல்வியுற்றிருந்தார்.

இந்நிலையில், அவரது குடும்பம் உட்பட அந்த அரசில் அங்கம் வகித்த பெரும்பாலானவர்கள் ஊழல் மோசடிகளில் சிக்கியவர்களே. இவர்களின் ஊழல்கள் நடைமுறை அரசின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டதால், அதனைத் தடுப்பதற்கான வழியாக மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தேர்தலில் வெற்றிபெற்று தம்முடைய ஊழல்களை மறைப்பதற்கு தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், ஊழலற்றவராகவும் சிங்கள மக்கள் மத்தியில் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வரப் பார்க்கின்றார். உண்மையில் இவர் ஊழலற்றவர் என்றால், அவர் உட்பட அவர் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட ஊழல்களுக்குப் பதிலளித்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் – என்றார்.

Related Posts