Ad Widget

இன்புளுவென்ஸாவுக்கு எதிராக போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை!

இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் நாடு பூராகவும் பரவுவதைத் தடுக்க, சுகாதார அமைச்சு போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என, அகில இலங்கை தாதிமார் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த வைரஸ் தொடர்பில் தற்போது உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்தவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் தொற்று ஏற்படக் கூடும் என கூறப்படும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குறித்த தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தடுப்பூசியை நாட்டுக்கு போதுமான அளவு கொண்டு வருதல் மற்றும் நோயாளிகளுக்கு பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றின் தாமதத்திற்கு காரணம் என்ன என்பது, சிக்கலான விடயமாக உள்ளதாக காமினி குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Posts