- Friday
- September 19th, 2025

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களான 9 பேரையும் 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவிற்கமைய ஏற்றுக் கொண்டு இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று உத்தரவிட்டது. இதேவேளை மன்றின்...

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்கள் 9பேரையும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்கள் 9பேரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.இதன்போதே இவர்கள் எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார். இதன் போது...

தேர்தலில் போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசிய பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக அங்கு சென்றிருந்த போது அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். அவரின்...

யாழ்ப்பாண வங்கி (Bank Of Jaffna) என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாங்க் ஒப் ஜப்னா (Bank Of Jaffna) என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர். பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில்...

"வவுனியாவிலும் "இன்புளுவன்சா' வைரஸ் நோய் தாக்கம் உள்ளமையால் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்'' என்று வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் இறந்தமை தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிவந்த நிலையில், உண்மை நிலையை அறியும்பொருட்டு அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும்...

உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம், இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவது இது, இரண்டாவது தடவையாகும் என்பதுடன் பகல் பொழுதில்...

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில்...

இலங்கை அரசாங்கத்தால் பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வைஃபை எனப்படுகின்ற கம்பிஇல்லாத இணையத் தொடர்பு சேவையானது நாட்டிலேயே யாழ்ப்பாணத்தில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கண்டறியப்பட்டிருக்கின்றது. நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள பொது நூலகம், ரயில் நிலையம் போன்ற 100 இடங்களில் அரசின் இந்த இலவச இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. இணையத்திற்கான இந்த இலவச சேவையைப்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேக நபர்கள் கடந்த முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்...

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய குழு ஒன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு நீதிமன்ற நீதிபதி பிரியந்த குணவர்த்தன தலைமையில் ஐவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

வலி.வடக்கு மக்களை அவரவர் நிலங்களில் விரைவில் முழுமையாகக் குடியமர்த்துங்கள்.இல்லையேல்,கடந்த அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதைப் போல் விரைவில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். வலி.வடக்கு மக்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.அதனை முன்னிட்டு...

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் சனிக்கிழமை (13) விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தினத்தன்று, விளக்கேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒன்றரை மணிநேரமாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, யாருடைய பின்புலத்தின் அடிப்படையில் விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது?...

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு, முழு விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டை வழங்குவது, நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கத் தவறும் வைத்தியசாலைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது. மருந்து வழங்கும் வைத்திய சேவை மற்றும் மருந்து விபரங்கள் தொடர்பான தகவல்களைப்...

கடந்த ஐந்து மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 15,171 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது. இதில் 4,300 க்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். தொற்று நோய் பிரிவின் அறிக்கையின் படி, கொழும்பு மாவட்டத்தில் 4,327 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2,076 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 737 பேரும்...

புங்குடுதீவு மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை, விடுவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கட்டளையிட்டதாக கூறப்படுவது தொடர்பில் இரகசிய பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் இரண்டு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடம்பெற்ற அண்மைய நாளொன்றில் அந்த சந்தேகநபரை கிராமத்தவர்கள் பிடித்து உப-பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தொடர்பான பிரச்சினைகளை கையாளக் கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில் தற்போது நாடாளுமன்றத்தை கலைப்பது பொருத்தமாக இருக்குமென கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கூறியது. இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கும் அதற்கான விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்குமான நியமனங்கள் பற்றி சர்வதேச கருத்தாடல்களை நடத்திவருவதாக த.தே.கூ பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் கிழக்கை சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. அதனை அடுத்து பெற்றோரால் ஞாயிற்றுக்கிழமை காலை...

தற்போதைய அரசாங்கம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் நீக்கவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் கசிம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிய அறிக்கையில் வடக்கில் இருந்து தற்போதைய அரசாங்கம் 59 இராணுவ முகாம்களை...

வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் 2014ஆம் ஆண்டு தவிசாளர் பதவியில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சபையின் 2013ஆம்...

"புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன் இந்த அரசு மனம் விட்டு பேச முன்வந்துள்ளமை மிகவும் முற்போக்கான செயலாகும். மைத்திரி அரசின் இந்த முன்னேற்றகரமான நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கும் இனவாதிகளுக்கும் தக்கபாடமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

All posts loaded
No more posts