Ad Widget

யாழ். குடாநாட்டில் குடிநீர் மாசை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு!

யாழ்.குடாநாட்டில் குடிநீரில் கலந்துள்ள கழிவு ஒயில் மற்றும் மாசடைதலை கண்டுபிடிப்பதற்கான கருவி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ சங்கத்தினர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற ஊடகவியர்கள் உடனான சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது,

உயிரியல் மண்வடிகட்டி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவி கிறிஸ் மற்றும் கழிவு ஒயில்களை அகற்றுவதற்கான செயற்திறனை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த புதிய கருவியினை எதிர்வரும் இரண்டு மாதங்களில் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த உயிரியல் மண் வடிகட்டி 100 வீதம் செயற்படுவதற்கான பரிசோதனைகளை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பரிசோதனைகளின் பின்னர் உயிரியல் மண்வடிகட்டியினை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள முடியும். எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், யுவி கதிர்வீச்சுக்களை பொறிமுறையில் இணைத்து, குடிநீர் மாசுபடுதலை தடுக்க முயற்சித்து வருகின்றதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் யாழ்.மருத்துவ சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன் மற்றும், மருத்துவர் நோவில் விஜயசேகர சமூதாய மருத்துவதுறை தலைவர் எஸ் சுரேந்திரகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

யாழ்.குடாநாட்டில் குடிநீரில் கலந்துள்ள கழிவு ஒயில் மற்றும் மாசடைதலை கண்டு பிடிப்பதற்கான இந்த பொறிமுறை மருத்துவர் நொவில் விஜயசேகரவினால் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts