Ad Widget

தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை தினம்

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை நிகழ்வு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

ஈழத்தில் வாழும் வயதில் மூத்த சிவாச்சார்யார்களாகிய இணுவில் காயத்திரி பீடத்தினுடைய முதல்வரும் தர்மசாஸ்தா குருகுல அதிபருமாகிய சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள், சரசாலை நுணுவில் சிதம்பர விநாயகர் ஆலய மூத்த குருக்கள் சிவஸ்ரீ சு.நடராஜக்குருக்கள் ஆகியோருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

குருபூசை வைபவத்தில் இசை ஆசிரியர் யசோதா ஸ்ரீகுமரனின் பண்ணிசை அரங்கம், துர்க்காதேவி தேவஸ்தானப் பிரதம குரு சிவஸ்ரீ வா.அகிலேஸ்வரக் குருக்கள், சுந்தர ஆஞ்சநேயர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள், நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோரது ஆசியுரைகளும் இடம்பெற்றது.

துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னிரு திருமுறை வெளியீட்டின் ஓரங்கமாகப் பன்னிரண்டாம் திருமுறையாக விளங்கும் திருத்தொண்டர் புராணத்தின் முதற்பாகம் வெளியிட்டு இடம்பெற்றது. இதன் வெளியீட்டுரையை அருள்மொழியரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் வழங்கினார்.

Related Posts