- Friday
- November 1st, 2024
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கும் நோக்கில் இனந்தெரியாத மர்ம நபர்கள் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் மேற்படி ஊடகவியலாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான உறுதிமொழியை வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர்களை, வட...
தென்மராட்சி – மட்டுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதே தினத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் நேற்றய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்...
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை, வியாழக்கிழமை(09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் 11...
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில்...
வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க உத்தரவிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், வேலணை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு, களவு மற்றும் சட்டவிரோத...
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது. இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில்...
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார்,...
மாதகல் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த தீவிர தேடுதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். மாதகல் கடல்...
நெல்லியடி பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இந்தியப் பிரஜை சுற்றுலா விசாவில் இலங்கை வந்து துணி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் பேதுருதுடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்த மேலதி விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலி செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கடவுச்சீட்டு விஸாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இவ்விருவரும் பஹ்ரைனூ டாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். மிஹின் லங்கா விமான சேவையினூடாக பஹ்ரைன் செல்வதற்காக நேற்று...
யாழ்ப்பாணம், மணிக்கூட்டு வீதியின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்காரக் கட்டுக்களை உடைத்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (12) தெரிவித்தார். மணிக்கூட்டு கோபுர வீதியின் அழகுக்காக வீதியின் நடுவில் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களும் பூந்தொட்டிகளும் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையால் நிர்மாணக்கப்பட்டு மின்விளக்குகளும்...
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு...
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 86 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (26) மாலை கைது செய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அறுவரில், பிரதான சந்தேக நபரை கொல்லப்பட்டவரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (24) அடையாளம் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் அறுவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு...
கோண்டாவில் பகுதியில் மரண சடங்கு நடைபெற்ற வீட்டுக்குள் புகுந்து கடந்த புதன்கிழமை (18) தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றத்துக்காக கோண்டாவில் பகுதியை சேர்ந்த நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை (23) சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் மரணச் சடங்கு இடம்பெற்று சடலத்தை தகனம் செய்யும் பொருட்டு...
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி நேற்று(22) பிற்பகல் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான கடவுச் சீட்டை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் நேற்று பிற்பகல் மாலம்பேயிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி பொலிஸ் சிரேஷ்ட அத்தியகட்சரும் பொலிஸ் ஊடகப்...
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது, இருவருக்கும்...
பிரதி அமைச்சர் விஜயகலாவின் மைத்துனரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரரான பிரபல வர்த்தகர் துவாரகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வர்தகர்களிடமிருந்து கோடி கணக்கான ரூபாய்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். இவருக்கு நீதிமன்றத்தால் அனுப்பட்ட சம்மனை இவர்...
இளவாலை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளை ஞாயிற்றுக்கிழமை (15) தீயிட்டு எரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேந்தான்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பேரை திங்கட்கிழமை (16) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். எரிந்த படகுகளுக்கு அருகில் கிடந்த பெனியன் மற்றும் லைற்றர் ஆகியவற்றை கொண்டு மோப்பநாயின் உதவியுடன் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக...
கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில்...
Loading posts...
All posts loaded
No more posts