Ad Widget

பேஸ்புக் குறித்து 3 மாதங்களில் 500 முறைப்பாடு!

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் மாத்திரம் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

போலி பேஸ்புக் கணக்கு குறித்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஏனையவர்களின் கணக்குகளை முடக்கி தரவுகளை மாற்றியமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முறைப்பாடுகள் குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Posts