Ad Widget

சட்டவிரோத செயற்பாடுகள் 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்

வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க உத்தரவிட்டார்.

police

யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், வேலணை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு, களவு மற்றும் சட்டவிரோத மதுவிற்பனை என்பன அதிகரித்து காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த வேலணை பகுதிக்கு பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க வேண்டும் என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரிடம் வேலணை பிரதேச சபை தவிசாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வேலணை பகுதிக்கு என பொலிஸ் காவலரண் தேவையில்லை. வேலணை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களை ஊர்காவற்துறை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியும்.

இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்தில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதன்மூலம் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு அவர்களை 30 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்த வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

Related Posts