விஷேட தேவையுடைய மாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபர் விளக்கமறியலில்

செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களால் சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த அதிபரை பாடசாலைச் சமூகம் இடைநிறுத்தியிருந்ததோடு, நன்னடத்தைப்...

யாழ். யுவதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

அபுதாபி சென்று அதனூடாக இத்தாலி செல்ல முயன்ற யுவதியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த யுவதியை இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக...
Ad Widget

நல்லூர் ஆலயத்தில் கொள்ளை – பெண் கைது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இரண்டரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஒரு பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் யாழப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலயத்திற்கு வருகை தந்த பெண்ணிடம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நகைகளை கொள்ளையிட்டுள்ளார். சந்தேகநபர் ஆலய வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்....

சட்டங்களை மீறிய அதிகாரிகளுக்கு எதிராக புகார்

தேர்தல் காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவர் உட்பட அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்கள் என இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைக்கு அனுப்பியமை தொடர்பில் மேற்படி பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கபெற்றிருப்பதாக கனகராஜ் கூறினார். அதேபோல்,...

பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி மரணத்தில் சந்தேகம்! – மீள்விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

யாழ் பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி லோறன்ஸ் அனா எப்சிபா கடந்த மாதம் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்ததற்கு மருத்துவ பீட விரிவுரையாளர் ஞானகணேஸ் றஜித் (ஜெனா) என்பவர் மீது மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று முதல் தடவையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மாணவியின்...

ஐ.தே.க வேட்பாளர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (13) தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும்...

புங்குடுதீவு விவகாரம்: கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், புதன்கிழமை (12) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 60 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 4ஆவது சந்தேகநபரிடமிருந்து...

வித்தியா வழக்கைத் திசை திருப்ப முயன்றராம்! துவாரகேஸ்வரனுக்கு ரூ.20 இலட்சம் பிணையில் விடுதலை!!

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல வர்த்தகருமான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்தது. மாணவியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவை...

நீதிமன்ற தாக்குதல்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27பேர் தொடர்ந்து விளக்கமறியலில்...

போலி வாக்குச் சீட்டுக்களுடன் மூவர் கைது

சாவகச்சேரி, கச்சாய் பகுதியில் போலி வாக்குச் சீட்டுக்களுடன் வாகனத்தில் சென்ற 3 சந்தேகநபர்களை நேற்று திங்கட்கிழமை (10) இரவு கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனத்திலிருந்தே இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேர்தல் சுவரொட்டிகள் சிலவற்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். வாகனத்தில் ஒலிபெருக்கியை...

வீதிகளில் சின்னங்கள், விருப்பிலக்கங்களை பொறித்தால் நடவடிக்கை

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் வர்ணப்பூச்சுக்களால் வீதிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களுடைய விருப்பிலக்கங்களை பொறிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். மாவட்டத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை...

பதினெட்டு வயதுக்குக் குறைந்த தாலித் திருமணம் சட்டப்படி செல்லுபடியற்றது

கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது...

வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்

வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு கடந்த காலங்களில் அபராதம் விதிக்கப்படாமைக்கான காரணம், 298/2005 என்ற வழக்கின் படி, அதிகமான பாதைகளில் வேக எல்லைகள் சரியான முறையில்...

போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைதுசெய்யவும் – நீதிபதி

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். 'போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும்...

10ஆவது தடவையாக கசிப்புடன் கைதானவருக்கு விளக்கமறியல்

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக 10 ஆவது தடவையாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, வியாழக்கிழமை (06) வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்....

கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியது?

நாளை(8) நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை  பொறியியல் தொழில்நுட்ப பகுதி 2 க்கான வினாத்தான் கம்பகா மாவட்டத்தில் இன்று மாலை வெளியாகியுள்ளது .அதை வெளியிட்டவர் சம்பந்தமான விபரங்கள் இல்லை ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு விட்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பகா மாவட்டத்தில் உள்ள ரத்னவலி பாலிக வித்தியாலய மாணவர்களிடமே இந்த வினாத்தாள்...

பயணப் பொதியில் சடலம் – சந்தேகநபர் அளித்த வாக்குமூலம்

மன்னார் – மாந்தை மேற்கு – இலுப்பக்கடவை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட – கோவில்குளம் கிரமப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றதும் , மேற்படி இருவரும் கள்ளத்தொடர்பை பேணி வந்துள்ளதுடன் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்...

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் - வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி...

ஆவணி மாதம் பிணை வழங்க முடியாது – நீதிபதி மா.இளஞ்செழியன்

ஆவணி மாதத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய தேசிய அளவிலான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் யாழ். மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவேண்டிய தேவையுள்ளது. இதனால் இந்த மாதத்தில் பிணை வழங்க முடியாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவர்...

கூடப்பிறந்த சகோதரியை வல்லுறவுக்கு உட்படுத்திய சகோதரனுக்கு 5 வருட கடூழியச் சிறை

சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் சகோதரனுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில்...
Loading posts...

All posts loaded

No more posts