- Wednesday
- September 16th, 2026
அலைபேசிகளை பயன்படுத்தி கொண்டு வாகனம் செலுத்துவது, மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளூடூத், ஹேன்ப்ரியைப் பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு, சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தண்டப் பத்திரிகையை வழங்கமுடியாது என்றும் அதனால் அவ்வாறான...
சுன்னாகம் இணுவில் பகுதிகளில் மீண்டும் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இச்சம்பவம் இடம் பெற்று வருகின்றது. கடந்த சனிக்கிழமை இரவும் இளைஞர்குழுக்கள் பகிரங்கமாக வாள்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுடன் நடமாடியதாகவும் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தினால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள்...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின்போது, கலாசாரச் சீரழிவு குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்...
கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்கவேண்டிய போசாக்கு உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைச் சோடாத்தூள் (சேர்வ் எக்செல்), சீனி, பிஸ்கற் போன்றவை வழங்கப்பட்டது நிரூபணமாகியுள்ளதையடுத்து சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், 'கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கலில் அதிருப்தி - சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கம்...
பொலிஸ் அதிகாரியொருவரை கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதேசப் பொறுப்பாளருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவரை நிரபராதி என தீர்ப்பளித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுதலை செய்தார். கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி இணுவில் பிரதேசத்தில் யாழ்.பொலிஸ் அத்தியட்சகரான சாள்ஸ் விஜயவர்த்தன என்பவரை கொலை செய்தார்...
குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும்...
வடமராட்சி வதிரிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த 4 பேரையும் 4 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தைத் துப்பரவு செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்தார். இந்த 4 பேரும் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்று மாணவிகளுடன் சேஷ்டை புரிந்து வருவதாக பருத்தித்துறை...
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதிபருக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரியிருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேக நபர் அங்கு கல்வி...
கஞ்சா கலந்த போதைப்பாக்கினை உடமையில் வைத்திருந்த தனியார் பஸ் நடத்துனர் ஒருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர், வவுனியா பகுதியினை சேர்ந்த 28 வயதுடையவர் என்றும் பயணியொருவர் வழங்கிய தகவலையடுத்து யாழிலிருந்து வவுனியாவுக்குச் செல்லும் தனியார் பஸ் நிலையத்தில் நடத்துனரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணொருவரைக் கொலை செய்த வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இருவரும் நிரபராதிகள் என யாழ்.மேல் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை (01) விடுதலை செய்தது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் தவீந்திரராஸ் கலைச்செல்வி என்பவரை கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரன் தவீந்திரராஸ்...
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரின், இரத்த மாதிரிகளை தனியார் இராசாயண பகுப்பாய்வு நிறுவனதிற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 14ம் திகதி புங்குடுதீவு...
இளவாளை பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக இளவாளை பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்கள் வேன் ஒன்றில் குறித்த கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஞ்சுள டி சில்வா குறிப்பிட்டார்....
கொலைக்குற்ற சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்யச் சென்றபோது குறித்த சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்ட முயன்றமையால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (30) மாலை அல்வாய் பகுதியில் இடம்பெற்றது. காலில் படுகாயமடைந்த சந்தேகநபரான எம்.சதீஸ்குமார் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். அல்வாய்...
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் இரண்டு பவுண் நிறையுடைய தங்கச்சங்கி ஒன்றும் மற்றும் ஏழரை பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்றும் திருட்டுப்போயுள்ளதாக...
மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம்...
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் 28 பேரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....
முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ´ஹோஹம்ப´ என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்....
6.396 மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன, வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெற்றோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காங்கேசன்துறை பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். இந்தியா, இராமேஸ்வரத்தினைச் சேர்ந்த காளி...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனங்களை பலர் நிறுத்திச் செல்வதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைக்கு வருகை தரும் அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் நோயாளிகள் ஏற்றி வரும் வாகனங்கள் உட்செல்ல முடியாதவாறு வாயிலுக்கு நேரே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில வாகன ஓட்டுனர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
