Ad Widget

கஞ்சா கடத்தியவரின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவு

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெற்றோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காங்கேசன்துறை பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார்.

இந்தியா, இராமேஸ்வரத்தினைச் சேர்ந்த காளி மாரி (வயது 37), எஸ்.அலெக்ஸாண்டர் (வயது 37) மற்றும் நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்த நிசாந் குமேரேஸ் (வயது 19) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 17 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

முதல் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால், நிசாந்த குமேரேஸ் 10 வயதில் இலங்கையிலிருந்து சென்று இந்தியாவில் குடியேறி அங்கு மீன்பிடியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த மூவரது வழக்கு தவணை முறையில் கடந்த 1 வருடகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இருவர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து நீதிமன்றத்தால், இந்தியத் துணைத்தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

3ஆவது நபர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது பெற்றோர்கள் இலங்கையில் வசிப்பதால் அவருடைய பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts