Ad Widget

மாணவிகளிடம் சேஷ்டையில் ஈடுபட்டவர்களுக்கு சமூக சேவை செய்ய உத்தரவு

வடமராட்சி வதிரிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த 4 பேரையும் 4 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தைத் துப்பரவு செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்தார்.

இந்த 4 பேரும் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்று மாணவிகளுடன் சேஷ்டை புரிந்து வருவதாக பருத்தித்துறை நீதவானுக்குத் புகைப்படத்துடன் தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதற்கிணங்க விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், 4 பேரையும் புதன்கிழமை (02) மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Related Posts