Ad Widget

இரு மொழிகளிலும் தேசிய கீதம்

வளலாயில் நடைபெற்ற பொதுமக்களுக்கான காணிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டது. வளலாய், வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திங்கட்கிழமை (23) வளலாய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்...

காணி விடுவிப்பு இப்போது ஆரம்பமே! இனி அது தொடரும் என்கிறார் ஜனாதிபதி

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பயம்,பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும். தமிழ் மக்களிடத்திலிருக்கும் பயம், பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்கவேண்டுமாயின் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை நாம் உணர்வோம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வயாவிளானில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியில் பொதுமக்களது காணிகள்...
Ad Widget

காணி கையளிப்பு : ஜனாதிபதி, பிரதமர், சந்திரிகா பங்கேற்பு!

வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (23) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள்...

மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ். நவீன சந்தையில் கடமையாற்றும் மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு செய்வதால் நவீன சந்தைக்கடைகள் திறக்கப்படவில்லை. யாழ். நவீன சந்தைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் என்.ஜெயசேகரம், யாழ்.மாநகர சபை ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் இதற்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் தாக்குதலுக்குள்ளான ஊழியருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் எனக்கோரியும் இந்த...

இரட்டை குடியுரிமைக்கு இன்றுதொடக்கம் விண்ணப்பிக்கலாம்!

இலங்­கையில் நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடி­யு­ரிமை விண்­ணப்­பங்­களை மேற்­கொள்ள முடியும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொது­மக்கள் ஒழுங்­குத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க இதனை அறி­வித்­துள்ளார். இரட்டை குடி­யு­ரி­மைக்­காக இது­வரை சுமார் 300 பொது­மக்கள் விண்­ணப்­பித்­துள்­ளனர். இவர்­களின் விண்­ணப்­பங்­களும் புதிய விண்­ணப்­பங்­க­ளுடன் பரி­சீ­லிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார். இரட்டை குடி­யு­ரிமை விண்­ணப்­பங்­க­ளின்­போது வயது வந்­த­வர்­க­ளுக்கு 250,...

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை நடைத்தப்பட்டது. போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை நீதியை தேடித்தராது என்று குறிப்பிட்டும், காணாமற்போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அரச செயலகத்துக்கு முன்பாக திரண்ட, காணாமற்போனோரின் உறவுகள், பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில்...

கணித விஞ்ஞான வள நிலையம் உருவாக்கப்பட்டமை சிறந்த செயற்பாடு

கிளிநொச்சி நகரில் கணித, விஞ்ஞான வள நிலையம் உருவாக்கப்பட்டுள்ளமை சிறந்த செயற்பாடு என மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஷ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி, திருநகர் வடக்கில் அமைக்கப்பட்ட கணித, விஞ்ஞான வள நிலையத்தை சனிக்கிழமை (21) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர். இந்த வளநிலையத்தினூடாக பிள்ளைகள் தங்களை...

அரசுக்கும் இராணுவத்துக்கும் பிரச்சினை – முதலமைச்சர்

இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையில் பிரச்சினை தோன்றியுள்ளதா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வசாவிளான் கிழக்குப் பகுதியில் விடுவிக்கப்படுவதாகக் கூறிய 197 ஏக்கர் காணிகளில் மக்கள் மீளக்குடியேறும் பொருட்டு, காணிகளை பார்வையிடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (20) சென்ற போது, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணிகளை பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளித்தனர். அரசாங்கம் காணிகளை...

ஃபீல்ட் மார்ஷலாக தரமுயர்ந்தார் பொன்சேகா

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

 உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் செல்ல முதலமைச்சர் சி.வி.க்கு தடை

வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உட்செல்ல விடாது இராணுவத்தினர், ஞாயிற்றுக்கிழமை (22) தடுத்து நிறுத்தினார்கள். 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) அங்கு சென்றார். ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில்...

மஹிந்த வாழ்த்து

புதிதாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மாத்தறை, தெலிஜ்ஜவில சமரசிங்ஹாராம அறநெறிப் பாடசாலையின் நேற்று மாலை, மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். அரசியல் தீர்மானங்களை நான்...

சாகிறத்துக்கு முதல் காணியை விடுங்கோ வயாவிளான் மூதாட்டியின் ஆதங்கம்

நீங்கள் பொன் தர வேண்டாம். எங்கள் சொந்த மண்ணை விட்டால் போதும். நான் செத்தா எனக்குப் பிறகு என்ர பிள்ளைகளுக்கு எது தங்கட காணியயன்றே தெரியாது. என்னைச் சாகிறதுக்கு இடையில பிள்ளைகளுக்குக் காணி யைக் காட்டவாவது விட வேணும்' என்று 75 வயதான அம்மா ஒருவர் தெரிவித்தார். வயாவிளான் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் மீள்குடியமர்வுக்கு...

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும், மீனவர்கள் பிரச்சனைக்கு காரணமாக உள்ள தடைசெய்யப்பட்ட வலைகளை முழமையாக தடுக்க நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையை கண்டித்து எதிர் வரும் 27ம் திகதி வரை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட...

வடமாகண சபையுடன் முறன்படத் தயாரில்லை – ஜனாதிபதி

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசு தயாராக இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தி, மத்திய மாகாண அரசுகளின் செயற்பாடுகளை வரையறுத்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்தியும் - மாகாணசபையும் இணைந்து செயற்படுவது...

சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ குவான் யூ காலமானார்!

சிங்கப்பூரின் தேசத் தந்தை எனப் புகழப்படும் லீ குவான் யூ இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமானார் என அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்தது. 91 வயதான லீ குவான் யூ கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் இறந்தார் என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி...

புதிய தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீல.சு.கட்சியினர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 01. ஏ.எச்.எம்.பெளசி - அனர்த்த முகாமைத்துவம் 02. எஸ்.பி.நவீன் - தொழில்...

உலக நீர் தினம் இன்று !

உலகளாவிய ரீதியில் மார்ச் 22 ஆம் திகதியாகிய இன்று உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ் வைபவத்தின் ​தேசிய நிகழ்வு இன்று சர்வதேச பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக "நீரும் நிலையான அபிவிருத்தியும் " என்ற கருத்து பேணப்பட்டு...

ராணுவத்தை வெளியேற்று இல்லையேல் போராட்டம் வெடிக்கும்

வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள் குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைபெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் ஏற்படுகிறது. 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை வீட்டை காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) வயாவிளான்...

குடும்பஸ்தரை காணவில்லை

வீட்டிலிருந்து தோட்ட வேலைக்குச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பவில்லை. கெற்பேலியைச் சேர்ந்த குணரத்தினம் குணதீபன் (வயது 28) என்பவரே கடந்த சனிக்கிழமை தொடக்கம் காணாமற்போயுள்ளார். காணாமற்போனது தொடர்பாக மனைவி கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மைத்திரியும் விரைவில் மஹிந்தவாக மாறுவார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் போல விரைவில் உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் அனைத்து அதிகாரங்க ளையும் தனது சட்டைப் பையில்தான் வைத்திருப்பார் என்று ஐக்கிய சோசலிசக் கட் சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழ்.ரிம்மர் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts