Ad Widget

சட்டக்கல்லூரியில் புதிய நடைமுறை

சட்டக்கல்லூரியில் கற்கையினை மேற்கொள்பவர்களுக்கு வயதெல்லைக்கான வரையறை நீக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதல் சட்டக்கல்லூரியில் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிகாண் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு வயதெல்லையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிப்பரீட்சைக்கு தோற்றுபவர்கள் 35 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை காணப்பட்டது.ஆனால் இவ்வாண்டு...

புலம்பெயர் தமிழர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்: யாழ்.ஆயர்

'புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்' என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் தலைமையிலான குழுவினர் யாழ். ஆயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். (more…)
Ad Widget

பிரதேச செயலர்களின் 6 பேரின் இடமாற்றம் இன்று முதல்

யாழ். மாவட்டத்தின் 6 பிரதேச செயலர்களது இடமாற்றத்தை உடனடியாக இன்று முதல் அமுல்படுத்த வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் யாழ். மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தது. இதன் பின்னர்...

நல்லூரில் நேற்று இரவு வாள் முனையில் திருட்டு

கச்சேரி நல்லூர் வீதியில் நாலாம் சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 3 லட்சம் ரூபா பணம் மற்றும் 10 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது (more…)

இலவச உதவிகள் எவற்றையும் பாடசாலைகள் பெறத் தடை!; ஆளுநர் கடும் உத்தரவு

பாடசாலைகளிலுள்ள பதிவு செய்யப்படாத அபிவிருத்திச் சங்கங்கள் யாவும் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பாடசாலைகளுக்கு கிடைக்கும் இலவச உதவிகள், அன்பளிப்புகள் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளின் அனுமதியின்றி அதிபர்கள் எவரும் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். (more…)

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலைவெறிடா!

தனுசின் கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள "என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலைவெறிடா" இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)...

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை வருகிறார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார்.தேசிய மும்மொழி கொள்கை அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம்  திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைப்படும்

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளதுஇதனடிப்படையில், 2,4,6,8 ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு,...

காணாமற் போனோர் விவரங்களை பதிவுசெய்யக் கோருகிறது கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டோர் மற்றும் காணாமற் போனோரின் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.கொக்குவிலிலுள்ள தனது இல்லத்தில் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார் (more…)

முதுகல்விமாணிக் கற்கைநெறி ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில்

தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முதுகல்விமாணிக் கற்கை நெறி முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.கல்விவாண்மை, அனுபவம் கொண்ட தகுதியானவர்களைக் கொண்டு இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.யாழ். மாவட்டத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மட்டுமே இதற்கு விரிவுரையாற்ற வேண்டும் என்ற மட்டுப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. (more…)

குளிரான காலநிலை நீடிக்கும்

'குளிர்கால பருவக்காற்று' என அறியப்படும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக பல பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலும் அநுராதபுரத்திலும் வெப்பநிலை 18 பாகையாகவும் யாழ்ப்பாணத்தில் 19 பாகையாகவும்  நுவரெலியாவில் 7.7 பாகையாகவும்  குறைவடைந்துள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார்.  (more…)

பெற்றோல் தாங்கி வெடித்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பப் பட்டுக்கொண்டிருந்தது.அதே சமயம் எரிபொருள் நிரப்புவதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது. இதில் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகியது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வடமாகாண தேசியப் பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; வடமாகாணக் கல்வித் திணைக்களம்

வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.உடுப்பிட்டி மாணவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தோற்றி  அகில இலங்கை  ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.நேற்றுக் காலை 10 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு 11 மணிக்கே வெளியாகியது.கொழும்பு மாவட்டத்தில் காலை வெளியாகும் பெறுபேற்றினை மாலை...

யாழ்.கிழக்கு கடலில் சூறாவளி: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

யாழ். குடாநாட்டின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக  இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடலில் இருந்து 750 கிலோ மீற்றர் தூரத்திலே சூறாவளி மையம் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து,  வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இலங்கை வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது

உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று 25.12.2011 வெளியாகும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்போகிறேன்- டக்ளஸ் தேவானந்தா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக அமைச்சரும் ஈ.பி.டி.பியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வி இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கில் ஆட்கடத்தல்களில் ஈ.பி.டி.பி ஈடுபட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே தாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக...

யாழ்.மக்களை கலாசார பிறழ்வு, போதை பொருட்களிலிருந்து பாதுகாக்க புதிய குழு

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கலாசார பிறழ்வு மற்றும் போதைப் பொருள் பாவனையிலிருந்து யாழ்.மக்களை பாதுகாப்பதற்காகவும் யாழின். கலாசாரத்தினை பேணுவதற்காகவும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் புதிய குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பிரதிநிதி சீ....

கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை விட மோசம்!- பசில் ராஜபக்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு மோசமாக நடந்து கொள்கிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை(21.12.2011) நாடாளுமன்ற கட்டடத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த...

தமிழ் மக்களின் உரிமைகளை தாரைவார்த்து கொடுத்துவிடமாட்டோம்; -இரா. சம்பந்தன்

இந்த நாட்டின் நிர்வாக மற்றும் நீதி துறைகளின் அதியுச்ச பதவிகளில் இருந்தவர்கள் 18 ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பை மூன்றே மூன்று ஜே.வி.பியினர் எதிர்த்ததும் நீதிமன்றம் பிரித்ததை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts