Ad Widget

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும், மீனவர்கள் பிரச்சனைக்கு காரணமாக உள்ள தடைசெய்யப்பட்ட வலைகளை முழமையாக தடுக்க நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையை கண்டித்து எதிர் வரும் 27ம் திகதி வரை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட...

வடமாகண சபையுடன் முறன்படத் தயாரில்லை – ஜனாதிபதி

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசு தயாராக இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தி, மத்திய மாகாண அரசுகளின் செயற்பாடுகளை வரையறுத்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்தியும் - மாகாணசபையும் இணைந்து செயற்படுவது...
Ad Widget

சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ குவான் யூ காலமானார்!

சிங்கப்பூரின் தேசத் தந்தை எனப் புகழப்படும் லீ குவான் யூ இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமானார் என அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்தது. 91 வயதான லீ குவான் யூ கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் இறந்தார் என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி...

புதிய தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீல.சு.கட்சியினர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 01. ஏ.எச்.எம்.பெளசி - அனர்த்த முகாமைத்துவம் 02. எஸ்.பி.நவீன் - தொழில்...

உலக நீர் தினம் இன்று !

உலகளாவிய ரீதியில் மார்ச் 22 ஆம் திகதியாகிய இன்று உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ் வைபவத்தின் ​தேசிய நிகழ்வு இன்று சர்வதேச பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக "நீரும் நிலையான அபிவிருத்தியும் " என்ற கருத்து பேணப்பட்டு...

ராணுவத்தை வெளியேற்று இல்லையேல் போராட்டம் வெடிக்கும்

வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள் குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைபெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் ஏற்படுகிறது. 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை வீட்டை காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) வயாவிளான்...

குடும்பஸ்தரை காணவில்லை

வீட்டிலிருந்து தோட்ட வேலைக்குச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பவில்லை. கெற்பேலியைச் சேர்ந்த குணரத்தினம் குணதீபன் (வயது 28) என்பவரே கடந்த சனிக்கிழமை தொடக்கம் காணாமற்போயுள்ளார். காணாமற்போனது தொடர்பாக மனைவி கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மைத்திரியும் விரைவில் மஹிந்தவாக மாறுவார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் போல விரைவில் உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் அனைத்து அதிகாரங்க ளையும் தனது சட்டைப் பையில்தான் வைத்திருப்பார் என்று ஐக்கிய சோசலிசக் கட் சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழ்.ரிம்மர் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்....

அத்துமீறிய மீன்பிடி; இந்திய மீனவர்கள் கைது

மாதகல் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த தீவிர தேடுதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். மாதகல் கடல்...

வடமாகாண சுகாதார அமைச்சால் 455 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் நீண்ட காலமாக அமைய, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 455 பேருக்கு நிரந்தர நியமனம் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கடந்த காலங்களில் குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட...

யாழில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் சுமூகமாக தீர்ந்தது

கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள அழகுமாடக்கடைகள் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்.மாநகர சபை மஞ்சள் கோட்டுக்கு வெளியே அழகுமாடப் பொருட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று சட்டம் ஒன்றினை விதித்திருந்தது. நேற்றைய தினம் ஒரு அழகு மாடக்கடையின் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் மஞ்சள் கோட்டிற்கு வெளியே அவை வைக்கப்பட்டிருந்தது. இதனால்...

நெல்லியடியில் இந்தியப் பிரஜை கைது

நெல்லியடி பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இந்தியப் பிரஜை சுற்றுலா விசாவில் இலங்கை வந்து துணி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் பேதுருதுடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்த மேலதி விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகர சபைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்திவரும் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி இன்று சனிக்கிழமை பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நவீன சந்தைக் கட்டடத்தில் கடையின் முன்னால் உள்ள பொது மக்களின் நடை பாதையில் பொருள்களை இறக்கிவைத்தாக கூறி யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அந்தப் பொருள்களை...

தென்மராட்சியில் புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை

புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளதாக சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.வதூர்தீன் தெரிவித்தார். இந்நடமாடும் சேவையில் கடந்த காலத்தில் தென்மராட்சி பிரதேசத்தில் தமது சொத்துக்களை இழந்து பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலத்தப்படவுள்ளதாக...

மீனவர்கள் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் உடன்பாடு

இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை, எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அரச வைத்தியகள் சங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசிடம் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபடப் போகின்றனர் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அரசிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து 8 வாரங்கள்...

மருதடியான் ஆலயத்தில் மீண்டும் சிக்கல்!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. இந்நிலையில் கொடியேற்றத்தின் போது பின்பற்றப்படும் மரபை ஆலய நிர்வாகத்தினர் சிலர் பின்பற்றாது தவிர்க்க முயல்கின்றனர். இதனால் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் புறந்தள்ளி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. இந்த ஆலய...

வடமாகாண சாலைகளின் ஆளணிப் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் – விஜயகலா

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலைகளில் நிலவிவந்த ஆளணிப் பற்றாக்குறை எதிர்வரும் ஏப்ரல் மாத முற்பகுதியில் நிவர்த்தி செய்யப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய போக்குவரத்து அமைச்சால் வடமாகாண சாலைகளுக்கு 35 பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. சாலைகளில் சாரதி,...

பாலியல் நோய்ப் பிரிவுக்கு புதிய தொலைபேசி இலக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் புதிய தொலைபேசி இலக்கம் 0212217756 என மாற்றப்பட்டுள்ளதாக பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி தாரணி குருபரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் பாலியல் தொற்று நோய் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா...

நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்த நபர்களை கைது செய்யயுமாறு கோரி பேரணி

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் குடிநீர் தாங்கியில் நஞ்சு கலந்த, 26 மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கண்டனப்பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை (20) சுன்னாகத்தில் நடைபெற்றது. தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கண்டனப் பேரணியானது, ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, புன்னாலைக்கட்டுவன்...
Loading posts...

All posts loaded

No more posts